Saturday, 17 November 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 20-10-2018-ல் முதலாம் ஆண்டுவிழா 12 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (20-10-2018 அன்று முதலாம் ஆண்டுவிழா மற்றும் ஆண்டுவிழா மலர் வெளியீட்டு விழாவாக 12 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 20-10-2018 மாலை 5.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மற்றும் ஆண்டுவிழா மலர் வெளியீடும் மாதாந்திர நிகழ்ச்சி (12ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. திருமதி. துளசிமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த மாத சந்திப்பில், வழக்கத்திற்காக மாறாக சிறுவர்கள் மாறுவேடத்தில் வந்து அசத்தினர்.
ஜோஷிக்கா ஔவையார் வேடத்தில் வந்து 'நான்கு கோடி பாடல்' என்ற தலைப்பில் வரும் பாடலைப் பாடி பொருளும் கூறினார். "உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்" என்ற தலைப்பில் வந்த வைரமுத்து அவர்களின் கவிதையை தக்க ஏற்ற இறக்கத்துடன் வழங்கிச் சென்றார் கவின்நிலா. தமிழே வாழ்க என்ற மொழி வாழ்த்தினையும் 147 ஆவது பாடலாக  பாலை திணையில் வரும் "ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த" எனத் தொடங்கும் செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது தலைப்பில் வந்த அகநானூறு பாடலையும் தம் மழலை மொழியால் பாடிச் சென்றார் ஸ்ரீயா.
அடுத்து வந்த சிறப்பு அங்கத்தில், கன்னத்தில் பொத்தி வைப்பேன்... ராதை மனதில்... காக்கை இல்ல சீமையில.. என்ற பாடல்களோடு ஆடினர் நீக்கிதா, பிரவிதா மற்றும் ஜீவஜோதிகா.
தமிழ் மன்னன் அதியமான் பற்றி அழகுற சிறப்பாக பேசினார் நிதிஷ்ராஜ். கண்ணகி வேடத்தில் வழக்குரைக் காதையை தகுந்த உச்சரிப்புடன் வழங்கினார் லிதர்ஸா.

முதலாம் ஆண்டுவிழாவில் புறநானூறு பாடல்களுக்கு இலக்கிய நாடகங்களை அரங்கேற்றியது சிறப்பாகும். வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறுவர் நாடகம் முதல் குழுவில் இணைந்தவர்கள் ஜீவஜோதிகா, சம்ரிதா, பிரித்தீவ் மற்றும் அதர்வா. "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்ற புறநானூறு பாடலுக்கான கருத்தோடு "மிஞ்சாதே !" என்ற தலைப்பில் நாடகம் அரங்கையே அதிர வைத்த முதல் நாடகத்தை அழகுற நடித்துச் சென்றனர்.

"அன்பு பத்தும் செய்யும்" என்ற தலைப்புடன் வந்த இரண்டாவது சிறுவர் நாடகக் குழுவினர் நந்திகா, அன்யா மற்றும் விமல், உலகை வெல்ல எளிய ஆயுதம் அன்பு ஒன்றே வழி என்ற கருந்துடன் "கடந்து அடு தானை மூவிரும் கூடி"  புறநானூறு பாடல் கபிலர் வேள் பாரி பற்றிய காட்சியில் நடித்து அனைவருடையப் பாராட்டையும் பெற்றனர்.

இவ்விரு நாடகங்களுக்கு இடையே தலைமையுரை வழங்கிய பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி முதலாம் ஆண்டுமலர் பற்றியும் கடந்த ஓராண்டு காலமாக செயலவை உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும் எடுத்துகூறி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

முதன்முறையாக பெரியவர்கள் பங்கெடுக்கும் பரதநாட்டியம் ஆடினர் திருமதி பவித்ரா மற்றும் திருமதி தேவிபாலா இருவரும் "தமிழே உயிரே வணக்கம்" என்ற பாடலுக்கு அழகுற அபிநயம் பிடித்தனர்.

தொடர்ந்து வந்த பெரியவர் நடனக் குழுவினர், தித் திமி... சொய் சொய்... தோட்டுக்கடை ஓரத்தில.... ஆகிய பாடல்கள் இணைந்த நாட்டுபுற நடனம் வழங்கி அசத்தினர் திருமதி தீபிகா, திருமதி வினோதினி, திருமதி உஷா மற்றும் திருமதி சவிதா

"தமிழ் இலக்கிய வரலாறு" என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள். கவிஞர் முத்து.இராஜசேகரன் அவர்கள் வாழ்த்துப்பா வழங்கி மகிழ்ந்தார்.

முதலாமாண்டு ஆண்டுவிழாவின் சிறப்பு அம்சமாக இந்த மாத நிகழ்ச்சியில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அங்கத்தினர் நடத்திய  பட்டிமன்றத்தில் அழகுற பேசினர் இலக்கியக் குடும்ப அங்கத்தினர். பட்டிமன்ற நடுவராக வந்தார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி. நல்வாழ்விற்கு மிகவும் உகந்தது ஏட்டறிவே! பட்டறிவே! என்ற தலைப்பில் ஒரு அணிக்கு நால்வர் களமிறங்கினர்.
ஏட்டறிவே என்ற அணியில் திருமதி பவித்ரா, திருமதி சங்கரி, திருமதி அன்னபூரணி மற்றும் திருமதி வினோதினி. பட்டறிவே என்ற அணியில் திருமதி தீபிகா, திருமதி உஷா, திருமதி மஞ்சுளா மற்றும் ஆசிரியை கலைவாணி வளமான கருத்துகளுடனும், கலகலப்பாகவும் பேசி தமது வாதங்களை நல்ல உச்சரிப்புடனும் உணர்வுடனும் பேசி அரங்கை அதிர வைத்தனர். தொடக்கவுரை முதல் முடிவுரை வரை இடையிடையே தக்க கேள்வி பதில்களுடன் பட்டிமன்றத்தை வழிநடத்திச் சென்றார் நடுவர்.

ஆண்டுவிழாவின் முக்கிய அங்கமாக "வாழ்வியல் இலக்கியப் பொழில் முதலாம் ஆண்டுவிழா மலர்" வெளியீடு கண்டது. முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் மலரை வெளியிட தமிழகத்தைச் சார்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. இராஜேந்திரன் அவர்கள் முதல் பிரதியைப் பெற விழாக் கோலமாக மாறியது அரங்கம்.

கடந்த ஓராண்டாக வாழ்வியல் இலக்கியப் பொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்ற செயலவைக்குழு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களுக்கு நினைவுப்பரிசினையும் ஆண்டுமலரையும் வழங்கி தம்முடைய நன்றியைத் தெரிவித்துகொண்டார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  

இசையிடையே, சிங்கப்பூர் தமிழ் முன்னோடிகள் சிலருடைய வாழ்க்கை வரலாற்றினை வழங்கி அதி குறிப்பாக தமிழவேள் கோ.சாரங்கபாணி, அசி .சுப்பையா; திரு நா.வீராசாமி நாயுடு, திரு கு, வேலுப்பிள்ளை பக்கிரிச் சாமி பிள்ளை ஆகியோரை ந்ன்றியோடு நினைவு கூறி, நிகழ்ச்சியை அழகுற நெறிபடுத்தி சென்றனர் திரு கலியபெருமாள் மற்றும் திரு கார்த்திக் இருவரும். நன்றியுரை வழங்கிய திருமதி கோமதி மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். தமிழில் பிறந்தாள் பாடல் ஒளியேற கார்த்தி மற்றும் கிருஷவ் ஆகியோரின் பிறந்தநாள் விழாவும் அரங்கேறியது சிறப்பாகும்.

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  12 ஆவது சந்திப்பு 20-10-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்




வாழ்வியல் இலக்கியப் பொழில் 08-09-2018-ல் 11 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (08-09-2018 அன்று 11 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 08-09-2018 மாலை 5.30 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (11ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "உலகில் சிறந்தது எது...?" என்னும் அழகியதோர் இசைப்பாடலை பாடினார் கவின்நிலா.

திருமதி. துளசிமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த மாத சந்திப்பில், வழக்கத்திற்காக மாறாக சிறுவர்கள் மாறுவேடத்தில் வந்து அசத்தினர். சந்தோஷ்குமார் திருநாவுக்கரசர் வேடத்தில் வந்து 'சொற்றுணை வேதியன்' என்றப் பாடலைப் பாடினார். தொடர்ந்து வந்த சமஸ்திகா விவசாயி வேடத்தில் கலப்பையுடன் வந்து சுவைபட பேசினார்.   ஜோஷிக்கா ஔவையார் வேடத்தில் வந்து 'ஒன்றானவன்' என்றுவரும் பாடலைப் பாடினார். ராதா மற்றும் கிருஷ்ணர் வேடத்தில் வந்தனர் இருவர் கெளஷிகா & தீக்சிகா. முறுக்கு மீசையுடன் பாரதியாக வந்தார் கிருஷவ்.

முதன்முறையாக இலக்கிய நாடகங்களை அரங்கேற்றியது சிறப்பாகும். வாழ்வியல் இலக்கியப் பொழில் முதல் சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தவர்கள் ஜீவஜோதிகா, பிரித்தீவ் மற்றும் சம்ரிதா. 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற மூதுரை பாடலுக்கான கருத்தோடு "நெருப்புடா..." என்ற தலைப்பில் நாடகம் அரங்கையே அதிர வைத்த முதல் நாடகத்தை அழகுற நடித்துச் சென்றனர். "வரும் ஆனா வராது" என்ற தலைப்புடன் வந்த இரண்டாவது சிறுவர் நாடகக் குழுவினர் நந்திகா, அன்யா மற்றும் விமல் கிடைக்க விதியிருந்தால் மட்டுமே கிடைக்க வேண்டியப் பொருள் கிடைக்கும் என்ற நல்வழிப் பாடல் கருத்துடன் களமிறங்கி நடித்து அனைவருடையப் பாராட்டையும் பெற்றனர்.

  
சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையாக 'தமிழில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் சிற்றுரை வழங்கினார்.

சிறு இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், வேரும் விழுதும் அங்கத்தில் திருமதி சவிதா மற்றும் அவருடையப் புதல்வி பிரவிதா 'தொகைச்சொற்கள்' என்றதொரு தலைப்பில் 1 முதல் 10 வரை விளக்கிய விதம் அருமை. தொடர்ந்த இலக்கிய உரையில், விவேக சிந்தாமணி நூலில் இருந்து சில பாடல்களுகடன் வந்தார் திருமதி வினோதினி. திடீர் அழைப்பாக மேடையேறிவர் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சிப் பற்றிய தமது கருத்தோடு, இவ்வகை அரிய வகை நிகழ்ச்சி சிங்கையில் தொடர்ந்து நடைபெறவும் வாழ்த்துரைத்தார். அவருடைய எளிய உரை அனைவரையும் கவர்ந்தது.

எதிர்வரும் முதலாமாண்டு ஆண்டுவிழாவின் ஒத்திகை நிகழ்ச்சியாக அமைந்த இந்த மாத நிகழ்ச்சியில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அங்கத்தினர் நடத்திய முதல் பட்டிமன்றத்தில் அழகுற பேசினர் இலக்கியக் குடும்ப அங்கத்தினர். மூவர் திருமதி தீபிகா, திருமதி உஷா மற்றும் திருமதி மஞ்சுளா இலக்கியக் கூற்றுகளைக் கற்றறிதல் எளியதே என்ற அணியிலும், திருமதி பவித்ரா, திருமதி எழிலரசி மற்றும் திருமதி சங்கரி வலியதே என்ற அணியிலும் வலமான கருத்துகளுடனும், கலகலப்பாகவும் பேசினர். இவர்களில் யாரும் முதல்முறையாகப் பட்டிமன்றத்தில் பேசுவதாக இல்லாமல் தமது வாதங்களை நல்ல உச்சரிப்புடனும் உணர்வுடனும் பேசி அரங்கை அதிர வைத்தனர். தொடக்கவுரை முதல் முடிவுரை வரை இடையிடையே தக்க கேள்வி பதில்களுடன் பட்டிமன்றத்தை வழிநடத்திச் சென்றார் இன்று நாடக வசன கர்த்தா மற்றும் பட்டிமன்ற நடுவர் என்ற புதிய இரு அவதாரங்களில் வந்தார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி.

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது. நன்றியுரை வழங்கிய திருமதி கோமதி மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சி நெறியாளர்களாக திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்தி அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.



வாழ்வியல் இலக்கியப் பொழில் -  11 ஆவது சந்திப்பு 08-09-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.


First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

வாழ்வியல் இலக்கியப் பொழில் 11-08-2018-ல் 10 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (11-08-2018 அன்று 10ஆவது நிகழ்ச்சி).


தமிழ்க் குடும்பத்தார் அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் வணக்கப் பாடலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம் என்ற பாடல் வந்தது.
“மகேஸ்வர கீதம்...” என்றவொரு பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நந்திகா.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நிகழ்வின் தேதி மற்றும் நேரம் இவற்றைக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் அந்த நிகழ்வின் காரணம் மற்றும் விளைவுகள் பற்றிய அறிவு மிக முக்கியம் என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் பள்ளிக் கால கதையோடு சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை தொடங்கி வைத்தனர் நெறியாளர்கள் திருமதி பவித்ரா மற்றும் திருமதி துளசிமணி அவர்கள்.

சிறுவர்கள் அங்கத்தை “ஏழும் பயனிலா ஏழும், உதவாத எட்டும்” என்பனவற்றை வலியுறுத்தும் விவேக சிந்தாமணி பாடல்களைக் கொண்டு தொடங்கி வைத்தார் ஜீவஜோதிகா.
தொடர்ந்து வந்த ப்ரித்தீவ்  கொக்கும் நரியும் என்றதொரு அழகியக் கதையைக் கூறினார். கௌஷிகா பாரதியாரின் பாடல் வரிகளை “ஒளி படைத்த கண்ணினாய் வா வா” அழகுறப் பாடினார். காணொளி வழியாக மறைமலை அடிகளாரின் பாடல் மூலம் “கல்வியே அழியாச் செல்வம்”  என்றக் கருத்தை வலியுறுத்திச் சென்றார் ஶ்ரீயா.
விமல் “தேடிச் சோறு நிதம் தின்று” என்ற  பாரதியார் பாடலை அழகுற பாடினார்.

தொடர்ந்து வந்த சர்வினி மூதுரை செய்யுள் “நன்றி ஒருவருக்கு செய்த உபகாரம்” மூலம் இரக்கத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறிச்சென்றார்.
ஜோஷிக்கா கிராமமும் நகரமும் என்ற நன்னெறிக் கதையைக் கூறினார்.நாலடியார் கூறும் செல்வத்தின் பயன் மற்றும் சிறப்புகளை சிற்றுரை மூலம் விளக்கினார் அன்யா.சந்தோஷ் குமார் பணக்காரனும் குயிலும் என்ற தலைப்பில் நன்னெறிக் கதையைக் கூறினார். கிருஷவ் ஆத்திச்சூடி வழங்கிச் சென்றார்.

நித்திகா திருக்குறள் சிலவற்றை அழகுற வழங்கினார். சம்ரிதா உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக் கதை ஒன்றை வழங்கிச் சென்றார்.தீக்சிகா ஓடிவிளையாடு பாப்பா பாடலை வழங்கிச் சென்றார். தாக்‌ஷாயணி “மனதில் உறுதி வேண்டும்” பாரதியார் பாடலைப் பாடிச் சென்றார். கமலிகா பாரதியார் பாடலை வழங்கிச்சென்றார்.


சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புரட்சி கவிஞர்
பாரதியார்தாசன் இயற்றிய சந்தப் பாடல் வரிகளில் வந்த திருப்புகழோடு தொடங்கி தமிழில் எழுத்திற்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தைபோல் தமிழில் எண்களின் பயன்பாடு எவ்வகையில் உள்ளன என்பதையும் பின்ன எண்களின் வகைபாடு பற்றியும் விவரித்தார். மேலும் வணிகத்தில் பயன்படுத்திய முறைமையும்  “தமிழில் அலகு” என்ற தலைப்பில்  அறிமுகவுரையில் வழங்கினார்.

சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய “வேரும் விழுதும்” என்ற புதிய அங்கத்தில் திருமதி. துளசிமணி மற்றும் அவருடைய புதல்வி சம்ரிதா இருவரும் சேர்ந்து ஏலாதி என்ற நூலினைப் பற்றிய உரையாடல் மூலம் சுவைபட வழங்கி அரங்கினரை உற்சாகமூட்டினர்.

பெரியவர்கள் உரையில், முதலாவதாக வந்தவர் திருமதி.வினோதினி விவேக சிந்தாமணி நூலில் வந்த சில பாடல்களை தொகுத்து சிற்றுரை வழங்கினார்.திருமதி.மஞ்சுளா திரிகடுகம் நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார்.முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து அல்ல பத்து மற்றும் தண்டாப்பத்து அதிகாரங்களில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார் திருமதி.தீபிகா.

கவிதையும் கானமும் அங்கத்தில் மாணவி கவின்நிலா கவிஞர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளை மிகவும் பொருத்தமான உச்சரிப்பில் வழங்கினார்.வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. பிஸியோதெரபி நிபுணர் பெண்களுக்கான இயக்குமுறை பயிற்சிகளை காணொளி வழியாக விளக்கிய விதம் அருமை. பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றியுரை வழங்கிய திருமதி. ஜெயசித்ரா சுரேன் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தார். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி. பவித்ரா கண்ணன் மற்றும் திருமதி துளசிமணி சத்தியமூர்த்தி . இவர்களுக்கிடேயான உரையாடல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து கடைசிவரை கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டுசென்ற விதம் மிக அருமை.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  10 ஆவது சந்திப்பு 11-08-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

Friday, 16 November 2018

29-07-2018 மதுரையில் தலைவருக்கு "கவிபாரதி பட்டம்" மாமதுரை கவி்ர் பேரவை.

Sunday, 29 July 2018

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 28-07-2018 தமிழ்ச்சங்கமம் 2018

தஞ்சாவூர் “தமிழ்ப் பல்கலைக் கழகம்” மற்றும் “அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை” இணைந்து நடத்தியவரும் “தமிழ்ச்சங்கமம் 2018” (இந்தியத் தமிழ்ச்சங்கங்களின் மாநாடு)
 திருவள்ளுவராண்டு 2049 ஆடித்திங்கள் 11,12,13 (ஜூலை 27,28,29 2018) விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது.

வழிநெடுகிலும் காவிரியாற்றின் துணையாறுகள் மற்றும் கால்வாய்கள் கரைபுரள்வதைக் காண மனம் நிறைவாக இருந்தது. சற்று காலங்கடந்த மதியவுணவு என்றாலும் நிறைவான உணவு, நெற்களஞ்சிய மண்ணில் விளைந்த நெற்மணியும், கூட்டும், பரிமாறும் பாங்கிலும் தமிழ்மணம் காண மனம் நெகிழ்ந்தது. நான் அடிக்கடி தென்தமிழகத்திற்கு பயணிக்கும் வாய்ப்பில்லாததால் மண்வாசனையை உணர்ந்ததில் மகிழ்வே.

அழகிய நுழைவாயில்,
அகன்ற சாலைகள்,
ஆயிரம் காணி நிலத்தில்
ஆங்காங்கே கட்டிடங்கள்;
மயில்கள் அகவக் கேட்டேன்;
குயில்கள் கூவக்கேட்டேன்;
தேனடை பலவும்;
நேர்த்தியான புறாக்கள் கூட்டம்;
இவற்றைக் கண்ட என்னுடைய மனமோ துள்ளிவரும் மானாய்த் துள்ளி விளையாடக் கண்டேன்.

மாலை 3 மணியளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அடைந்தபோது தமிழின உணர்வுகொண்டோரின் அன்பும், அரவணைக்கும் பாங்கும் என்னை நெகிழ்வில் ஆழ்த்தியது. கருத்தரங்க அமர்வு பொழிவு,
மொழிப்புல அவையத்தில்
கே.அசோக்குமார் அவர்கள்
(நிறுவனர் தொண்டைமண்டலப் பன்னாட்டுத் தமிழ்க் கூட்டமைப்பு) முன்னிலையில் இடம்பெற்றுக்கொண்டிருக்க, நான்அரங்கில்
நுழைந்த போது தமிழ்ப் பாரம்பரிய முறையில் தமிழ்தாயக்கு அரியணை, பூக்கோலம் வரவேற்று நின்றது. மருத்துவர் மு.சிவக்குமரன் அவர்கள் பழைய சோறு நீரில் மூழ்க வைத்திருந்து அதை மறுநாள் பயன்படுத்துவது தவறில்லை என்றும் மற்ற வகை குழம்பு வகைகளை மீதம் இருப்பின் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்தும் சூடுபடுத்தி மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த இருக்கும் ஆபத்துகளையும் அறிவுறுத்தினார். இது நம்முடைய நிகழ்ச்சியில் வரும் மருத்துவக் குறிப்புகள் அங்கத்தை நினைவூட்டியது.

தொடர்ந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கலந்து, ஐவகை நிலங்களுக்கான மரங்களாக எண்ணி, தமிழ்ப் பல்கலைக் கழக முகப்பில் மிகப் பெரிய அளவிலான வட்டத்திற்குள் வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசைகள் சூழ நடுவில் ஆழ மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது புதுமையிலும் புதுமை. அவற்றுள் ஆலமரம், சந்தன மரம் முதலியனவும் அடங்கும்.

குறிப்பாக சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் சார்பில் கொண்டு சென்ற (சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள சிங்கப்பூர்
மண்) மற்றும் அந்தமான் நாட்டிலிருந்தும் கொண்டு வந்த மண்ணும் சேர்க்கப்பட்டது சிறப்பாகும்.

முன்பே அறிமுகம் கண்டிருந்தபோதும் துணைவேந்தர் திரு.பாஸ்கரன் அவர்கள் என்னை வரவேற்று மகிழ்ந்தார். தில்லி தமிழ்ச்சங்கம், ஒரிசா தமிழ்ச்சங்கம், அந்தமான் இலக்கிய மன்றம் போன்ற எண்ணற்ற தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கொண்டதில் மகிழ்வே.

மாலை 6.30 மணியளவில் ‘சிலம்பின் சொல் (என்னும்) குடிமகள் பயணம்’ என்ற வரலாற்று நாடகம் கரிகாற்சோழன் கலையரங்கில் அரங்கேறியது. இதில் கருத்துள்ள பல சுவையான சம்பவங்கள் இயல் இசை நாடக வடிவில் மிகவும் உற்சாகமாக தமிழர் பண்பாட்டையும் அறிவுறுத்திச் சென்றது.
வழக்கமான விருந்தோம்பல் மற்றும் பரிமாற்றங்கள் என நிகழ்ச்சி நிறைவடைய மதுரையை நோக்கியப் பயணத்திற்கு தயாராகிறேன்.

தமிழ் மணத்துடன்.



Monday, 16 July 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 14-07-2018-ல் 9 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (14-07-2018 அன்று 9 ஆவது நிகழ்ச்சி).

சிராங்கூன் சமூக மன்றத்தில் 14-07-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. “நம்பி கெட்டவர் எவரைய்யா...” என்றவொரு பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் மருத்துவர் திருமதி அன்னபூரணி.
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை, தமிழர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்கிறார்கள் என்ற  நெகிழ்வான கருத்தை அமெரிக்காவில் முன்னாள் ஒபாமா அவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்கள் நிகழ்ச்சியில் நடந்த அனுபவத்தைக் கூறி தொடங்கி வைத்தனர் நெறியாளர்களாக வந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.
“நன்றி ஒருவருக்கு செய்தக்கால்” என்றதொரு மூதுரைப் பாடலுடன் விளக்கத்தை வழங்கியனார் சர்வினி. அடுத்து வந்த சமஸ்திகா “காக்கைச் சிறகினிலே” என்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் அழகியப் பாடலை பாடினார்.
தண்டலை மயில்கள் ஆட என்ற அழகிய கம்பராமாயணப் பாடல் வரிகளைப் பாடியும் பொருள் கூறியும் வழங்கிச் சென்றார் ஜீவஜோதிகா. கண்ணகி வழக்குரையாடல் என்ற தலைப்பில் அழகுற வாதிட்டார் கமலிகா.
தொடர்ந்து வந்த கௌசிகா கோகுல் பூட்டைத் திறப்பது கையாலே என்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார்.
வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப்பாடல் “நாமர்க்கும் குடியல்வோம் நமனையஞ்சோம்” பாடலை அழகுறப் பாடினார்.

அடுத்து வந்த ஶ்ரீஜா, “எண்ணெழுத்து இகழேல்” என்ற ஆத்திச்சூடிக் கதையைக் கூறினார்.
அடுத்து வந்த அஸ்வின் “நேர்மையான விறகுவெட்டி” என்ற நன்னெறிக் கதையைக் கூறினார். மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியார் பாடலைச் சுவைபட பாடினார் ஶ்ரீஹரி. தேவைக்கேற்ப தேவைப்படுவனவற்றை மட்டும் பேசவேண்டும் என்றதொரு கருத்தை வலியுறுத்தும் கதையாக “ஆமையும் கொக்கும்” என்ற தலைப்பில் நன்னெறிக் கதையை வழங்கினார் பிரித்தீவ். அடுத்து வந்த சந்தோஷ்குமார் மூதுரை நூலில் வந்த கடவுள் வாழ்த்துப் பாடலான வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்றப் பாடலை அழகுறப் பாடிச் சென்றார்.

உலக நீதிச் செய்யுள் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற செய்யுட் பாடலை வழங்கிச் சென்றார் தாட்சாயணி. ஆத்திச்சூடி வழங்கிச்சென்றார் கிருஷவ். தொடர்ந்து வந்த நந்திகா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற அழகியப் பாடலையும் பாரதியார் பற்றிய சிறிய அறிமுகத்தையும் தமது இனியக் குரலால் பாடினார்.

தொடர்ந்து வந்த விமல் விவேக சிந்தாமணி பாடல் “ஒப்புடன் முகம் மலர்ந்தே” என்று தொடங்கும் விருந்தோம்பல் எவ்வாறு இருக்க வேண்டும் வலியுறுத்தும் பாடலை வழங்கினார்.
அடுத்து வந்த தனீஸ்ராஜ் பழமொழி கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கேற்ப நல்லதொரு கதையைக் கூறினார்
பௌசல் ஹினயா வழங்கிய சிந்தனைப் பேச்சில் பொழுதுபோக்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிற்றுராற்றினார். தொடர்ந்து வந்த சலீம் ஸாபர் பேராசை பெரு நஷ்டம் என்ற தலைப்பில் நல்லதொரு கதையை வழங்கிச் சென்றார்.

சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தமிழிசை என்ற தலைப்பில் பாவினங்களின் வகைகளையும் அவற்றுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா போன்ற பாக்களை எந்தெந்த சூழ்நிலைகளில் அரங்கேற்றம் செய்யப்படும் என்பதை விவரித்தார். நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் அக்கால மன்னர்கள் யாவரும் தமிழின் தொன்மைகளை அறிந்திருந்தனர் என்றும் இக்கால தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதிய புதுக்கவிதையைக் கூட புரிந்துகொள்ளாத நிலையிலேயே தான் இருக்க காரணம் தமிழர்களாககிய நாம் நீர்த்துப் போன தமிழையேப் பருகிவருகின்ற காலமிது என்று வருந்தினார்.
சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய “வேரும் விழுதும்” என்ற புதிய அங்கத்தில் திருமதி. எழிலரசி மற்றும் அவருடைய புதல்வி கவின்நிலா சேர்ந்து திருவிளையாடல் படக்காட்சியை மிகவும் தத்ரூபமாக வழங்கி அரங்கினரை உற்சாகமூட்டினர்.
இரண்டாவது படைப்பாளிகளாக வந்த இரட்டையர் திருமதி துளசிமணி மற்றும் அவருடைய புதல்வி சம்ரிதா பழமொழி நானூறு வழங்கி விடுகதையோடு புதிர்போட்டனர்.


பெரியவர்கள் உரையில், திருமதி.மஞ்சுளா திரிகடுகம் நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். தொடர்ந்து வந்து,

முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து சிறந்தப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார் திருமதி.தீபிகா.

நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சேரன் பேச்சாளர் மன்ற முன்னாள் தலைவர் கவிஞர் உ.செல்வராஜூ இலக்கு என்ற தலைப்பில் தமது மன்ற இலக்கை எவ்வாறு சாத்தியப்படுத்தினார் என்பதையும் குழந்தைகளுக்கு லட்டு என்ற தலைப்பில் கவிதை வழங்கியும் சிறப்பித்தார். சிறப்புரை வழங்க தமிழகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள  அமைப்பின் தலைவர் அவர்களுடைய தந்தை பூ.எல்லப்பன் அவர்கள் இந்நிகழ்வு பற்றிய தமது அனுபவத்தையும் சில அறவுரைகளையும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி சிறப்பித்தார்.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. பிஸியோதெரபி நிபுணர் பெண்களுக்கான இயக்குமுறை பயிற்சிகளை காணொளி வழியாக விளக்கிய விதம் அருமை. பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றியுரை வழங்கிய திருமதி.தேவிபாலா கலியபெருமாள் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தால். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள்

மற்றும் திரு.கார்த்திக். இவர்களுக்கிடேயான உரையாடல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து கடைசிவரை கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டுசென்ற விதம் மிக அருமை.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  9 ஆவது சந்திப்பு 14-07-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/oKqP3wgtpYFCwt3d7

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/nBIWb6WAV0U

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !
மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

வாழ்வியல் இலக்கியப் பொழில் 23-06-2018-ல் 8 ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (23-08-2018 அன்று 8 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 23-06-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. தாம் தாம் தித்தாம்... என்றதொரு இசைக்கு பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவானி. முத்தை தரு பக்தி ... என்ற திருப்புகழ் பாடலை இசைபாடிச் சென்றார் பிர‌ஷிதா.
வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி. சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை ஒரு அழகிய கதையுடன் தொடங்கி வைத்தனர் நெறியாளர்கள் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

முதலாவதாக சமஸ்திகா ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் கவிதையை பாடிச்சென்றார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, நண்பர்களிடம் எப்படி நட்போடு பழக வேண்டும் என்பதை ளறும்பும் புறாவும் அழகியதோர் நன்னெறிக் கதையைக் மூலம் விளக்கினார்.

வழக்கம் போல் காணொளி வழியாக வந்த ஶ்ரீயா பாரதிதாசன் இயற்றிய மொழிவாழ்த்து பாடலை அழகுறப் பாடினார். பள்ளி விடுமுறையில் தாயகம் சென்றுள்ள தனீஷ்ராஜ் மனதில் உறுதிவேண்டும் என்ற பாரதியார் பாடலோடு வந்தார் காணொளி வழியாக.

அடுத்து வந்த அஸ்வின் எறும்பும் புறாவும் கதையோடு வந்தார். மழலைப் பாடலோடு வந்தார் நிக்கிதா. தேடிச் சென்று தினம் தின்று என்ற பாரதியார் வரிகளுடன் வந்தார் கமலிகா. காக்கை சிறகினிலே என்ற பாரதியார் பாடல் வரிகளை வழங்கினார் சர்வினி.

மூதுரை செய்யுள்களோடு வந்தார் சந்தோஷ்குமார். பாரதியார் பாடலோடு வந்தார் ஶ்ரீஹரி. சொர்கமும் நரகமும் கதையோடு வந்தார் பிரதஷிணா. தமிழகம் சென்றுள்ள நிதீஷ்ராஜ் ஆசாரக் கோவை பாடல்கள் பற்றி அழகுற விளக்கினார் காணொளி வழியாக. திருக்குறள் கதையைக் கூறிச் சென்றார் வாசினி. சங் க இலக்கியத்தில் வரும் 99 மலர்களின் பெயர்களை கூறிச்சென்றார் ஜீவஜோதிகா. நாலடியார் வரிகளோடு வந்தார் சம்ரிதா.

சிறுவர்கள் அங்கத்தை தொடர்ந்து வந்த வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, தமது அறிமுக உரையில் “சங்க இலக்கியத்தில் கடல்” என்னும் தலைப்பில் புறநானூறு மற்றும் சீவக சிந்தாமணி பாடல்களை மேற்கோள்காட்டி வழங்கினார். சங்க கால நூல்களின் மீது ஏற்பட்ட காதல் பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர் தமது இலக்கியப் பயணத்தை தெளிவுற வழங்கினார்.

சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய “வேரும் விழுதும்” என்ற புதிய அங்கத்தில் திருமதி. பவித்ரா மற்றும் அவருடைய புதல்வி அன்யா சேர்ந்து நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற வரியின் மூலமான திருக்குறள் மற்றும் நாலடியார் பற்றி தொடங்கி, நாலடியார் பாடல்களை வழங்கினர்.

பெரியவர்கள் உரையில், திருமதி.உஷா கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சி திணைப் பற்றி சிற்றுரை வழங்கினார். தொடர்ந்து வந்த திருமதி.மஞ்சுளா இனியவை நாற்பது நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார். முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து பொய்யாப்பத்து அதிகாரத்தில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார்.  நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. சங்க இலக்கியத்தில் கல்வி என்னும் தலைப்பில் சிற்றுரை வழங்கினார் திருமதி.துளசிமணி.

வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. நன்றியுரை வழங்கிய திருமதி.அனுராதா சுரேஷ் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், கதைகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்திக்.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  8 ஆவது சந்திப்பு 23-06-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/Bnyyog2Gh9x3wUf59

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:
https://youtu.be/yKNJMtt5iJM

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின் Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.
நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்