Saturday, 17 November 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 11-08-2018-ல் 10 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (11-08-2018 அன்று 10ஆவது நிகழ்ச்சி).


தமிழ்க் குடும்பத்தார் அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் வணக்கப் பாடலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம் என்ற பாடல் வந்தது.
மகேஸ்வர கீதம்...என்றவொரு பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் நந்திகா.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நிகழ்வின் தேதி மற்றும் நேரம் இவற்றைக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் அந்த நிகழ்வின் காரணம் மற்றும் விளைவுகள் பற்றிய அறிவு மிக முக்கியம் என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் பள்ளிக் கால கதையோடு சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தை தொடங்கி வைத்தனர் நெறியாளர்கள் திருமதி பவித்ரா மற்றும் திருமதி துளசிமணி அவர்கள்.

சிறுவர்கள் அங்கத்தை ஏழும் பயனிலா ஏழும், உதவாத எட்டும்என்பனவற்றை வலியுறுத்தும் விவேக சிந்தாமணி பாடல்களைக் கொண்டு தொடங்கி வைத்தார் ஜீவஜோதிகா.
தொடர்ந்து வந்த ப்ரித்தீவ்  கொக்கும் நரியும் என்றதொரு அழகியக் கதையைக் கூறினார். கௌஷிகா பாரதியாரின் பாடல் வரிகளை ஒளி படைத்த கண்ணினாய் வா வாஅழகுறப் பாடினார். காணொளி வழியாக மறைமலை அடிகளாரின் பாடல் மூலம் கல்வியே அழியாச் செல்வம்  என்றக் கருத்தை வலியுறுத்திச் சென்றார் ஶ்ரீயா.
விமல் தேடிச் சோறு நிதம் தின்றுஎன்ற  பாரதியார் பாடலை அழகுற பாடினார்.

தொடர்ந்து வந்த சர்வினி மூதுரை செய்யுள் நன்றி ஒருவருக்கு செய்த உபகாரம்மூலம் இரக்கத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறிச்சென்றார்.
ஜோஷிக்கா கிராமமும் நகரமும் என்ற நன்னெறிக் கதையைக் கூறினார்.நாலடியார் கூறும் செல்வத்தின் பயன் மற்றும் சிறப்புகளை சிற்றுரை மூலம் விளக்கினார் அன்யா.சந்தோஷ் குமார் பணக்காரனும் குயிலும் என்ற தலைப்பில் நன்னெறிக் கதையைக் கூறினார். கிருஷவ் ஆத்திச்சூடி வழங்கிச் சென்றார்.

நித்திகா திருக்குறள் சிலவற்றை அழகுற வழங்கினார். சம்ரிதா உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக் கதை ஒன்றை வழங்கிச் சென்றார்.தீக்சிகா ஓடிவிளையாடு பாப்பா பாடலை வழங்கிச் சென்றார். தாக்‌ஷாயணி மனதில் உறுதி வேண்டும்பாரதியார் பாடலைப் பாடிச் சென்றார். கமலிகா பாரதியார் பாடலை வழங்கிச்சென்றார்.


சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புரட்சி கவிஞர்
பாரதியார்தாசன் இயற்றிய சந்தப் பாடல் வரிகளில் வந்த திருப்புகழோடு தொடங்கி தமிழில் எழுத்திற்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தைபோல் தமிழில் எண்களின் பயன்பாடு எவ்வகையில் உள்ளன என்பதையும் பின்ன எண்களின் வகைபாடு பற்றியும் விவரித்தார். மேலும் வணிகத்தில் பயன்படுத்திய முறைமையும்  தமிழில் அலகுஎன்ற தலைப்பில்  அறிமுகவுரையில் வழங்கினார்.

சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கிய வேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. துளசிமணி மற்றும் அவருடைய புதல்வி சம்ரிதா இருவரும் சேர்ந்து ஏலாதி என்ற நூலினைப் பற்றிய உரையாடல் மூலம் சுவைபட வழங்கி அரங்கினரை உற்சாகமூட்டினர்.

பெரியவர்கள் உரையில், முதலாவதாக வந்தவர் திருமதி.வினோதினி விவேக சிந்தாமணி நூலில் வந்த சில பாடல்களை தொகுத்து சிற்றுரை வழங்கினார்.திருமதி.மஞ்சுளா திரிகடுகம் நூலில் இருந்து சில பாடல்களை விவரித்தார்.முதுமொழிக்காஞ்சி நூலில் இருந்து அல்ல பத்து மற்றும் தண்டாப்பத்து அதிகாரங்களில் வந்த பாடல்களை பற்றி சிற்றுரையாற்றினார் திருமதி.தீபிகா.

கவிதையும் கானமும் அங்கத்தில் மாணவி கவின்நிலா கவிஞர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளை மிகவும் பொருத்தமான உச்சரிப்பில் வழங்கினார்.வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி. பிஸியோதெரபி நிபுணர் பெண்களுக்கான இயக்குமுறை பயிற்சிகளை காணொளி வழியாக விளக்கிய விதம் அருமை. பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றியுரை வழங்கிய திருமதி. ஜெயசித்ரா சுரேன் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தார். தொடக்கம் முதல் கலந்துரையாடல்கள் மூலம் இடையிடையே குறிப்புகள், வினா விளக்கம் என பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி. பவித்ரா கண்ணன் மற்றும் திருமதி துளசிமணி சத்தியமூர்த்தி . இவர்களுக்கிடேயான உரையாடல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து கடைசிவரை கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டுசென்ற விதம் மிக அருமை.

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  10 ஆவது சந்திப்பு 11-08-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment