Wednesday 12 December 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 08-12-2018 -ல் 14ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (08-12-2018 அன்று 14 ஆவது நிகழ்ச்சி)......

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

ஹவ்காங் அவின்யூ 7ல் உள்ள எவர்கிரீன் பார்க் அரங்கில் 08-12-2018 மாலை 5.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (14ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. 

மாணவி நந்திகா "அலைபாயுதே கண்ணா" என்றதொரு சங்கீதம் வழி தொடங்கி வைத்தார். திருமதி. எழிலரசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த மாத சந்திப்பில், முதலாவதாக கமலிகா எறும்பும் வெட்டுக்கிளியும் என்ற நன்னெறி கதையுடன் வந்தார்.அடுத்ததாக செல்வி கவி ஆராதனா "ஆத்திச்சூடியில்" உயிர் வருக்கம் ஒன்று முதல் 13 வரை சிறப்பாக வழங்கிச் சென்றார். செல்வன் அஸ்வின் "நல்ல நண்பர்கள்" என்ற தலைப்பில் கதை ஒன்றை சுவாரசியமாக கூறிச் சென்றார்.செல்வி ஜோஷிகா பாரதியார் கவிதையை இனிமையாக கூறினார். அடுத்ததாக செல்வி சமஸ்திகா பாரதியார் பாடல் ஒன்றை சிறப்பாகக் கூறிச் சென்றார். செல்வன் கிருஷவ் “ககர” வர்க்க ஆத்திசூடியை சிறப்பாக வழங்கினார். செல்வி பிரஷிதா நாலடியார் பாடலை விளக்கத்துடன அருமையாகாக கூறிச் சென்றார். 

அவரைத் தொடர்ந்து செல்வன் நிதிஷ்ராஜ் 'மார்க்கண்டேயன்' கதையை  சிறப்பாக வழங்கினார். அடுத்ததாக செல்வி ஜீவஜோதிகா 'தொல்காப்பிய பாடலை' அழகாகக் கூறினார்.செல்வி கவுசிகா 'திருக்குறள்சில பாடல்களை நம் முன்னே சிறப்பாக வழங்கினார். செல்வி தண்யதா பாரதியார் கவிதை ஒன்றை நம் அனைவருக்கும்  சிறப்புடன் கூறிச் சென்றார். செல்வன் தணீஷ்ராஜ் மெய்யெழுத்து பாடலை தெளிவாக கூறினார். செல்வி தாக்ஷாயணி நீதிக்கதை ஒன்றை நாம் அனைவருக்கும் அழகாக எடுத்துக் கூறினார்.
சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையில் ‘அணி இலக்கணத்தில்” சிலவற்றில் வரும் சிலப்பதிகாரம் மற்றும் நளவெண்பா பாடல்களில் தற்குறிப்பேற்ற அணி பற்றியும் சிலேடை அணியில்  சொக்கநாதப் புலவர் இயற்றிய “வெங்காயம் சுக்கானால்” என்று வரும் பாடலையும் நகைச்சுவையாக வழங்கினார்.

சிறிய இடைவேளைக்குப் பின் தொடங்கிய நிகழ்ச்சியில், நா பிறழ்ச்சி.... அங்கமாக சில மாணவர்களை மேடையேற்றி, நெறியாளர்கள் கூறிய சொற்றொடர்களை மிகவும் வேகமாக ஐந்து முறை கூரக் கேட்டதற்கு, சிலர் தடுமாறினர். பெரியவர்களில் சிலர் மட்டும் ஐந்து முறை கூற முடிந்தது.

(1)  யாரு தச்ச சட்ட – எங்க
தாத்தா தச்ச சட்ட
(2)  குலைகுலையாய் வாழைப்பழம்
மழையில் அழுகி கீழே விழுந்தது

தமிழோடு கலப்பாக சென்றதில் அரிய விளையாட்டை அழகுற விளையாடினர்.

 'வேரும் விழுதும்' தலைப்பில் திருமதி பட்டு மற்றும் செல்வன் பிரித்திவ் இணைந்து பழமொழி சிலவற்றை குறித்து சிறப்பாக வழங்கினார்கள். பெரியவர்கள் படைக்கும் அங்கத்தில் ஆசிரியை கலைவாணி அவர்கள் திருக்குறள் மற்றும் அதன் பொருளை வெவ்வேறு கண்ணோட்டத்தில் சிறப்புடன் வழங்கிச் சென்றார். அவரைத் தொடர்ந்து “தமிழ் இலக்கிய வரலாறு" என்ற தலைப்பில் நமது நிகழ்சிகளில் தொடர்ந்து சிறப்புரை வழங்கி வரும் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் இந்த மாதம் தேவாரம் திருமுறைகளில் இடம்பெற்ற சில பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும் சுவையான தகவல்களை தொகுத்து வழங்கினார்.

ஆவலுடன் யாவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இ-பொழில் (e-pozhil quaterly magazine) காலாண்டிதழில் முதல் இதழை முனைவர் மா.இராஜிக்கண்ணு, தொடக்க கல்லூரி ஆசிரியை மற்றும் இதழாசிரியர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி இணைத்து வெளியிட வாழ்வியல் இலக்கியப் பொழில் மேலும் பொலிவுடன் தன்னுடைய அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளது என்றால் அது மிகையல்ல. 

அடுத்ததாக சித்த மருத்துவர் திருமதி சாவித்திரி அவர்கள் எழுதி அனுப்பி வைத்த சித்த மருத்துவ குறிப்புகளை நெறியாளர்களில் ஒருவராக பயணித்த திருமதி தீபிகா அழகுற வழங்கினார்.மேடையேறிய மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவுபரிசினை வழங்கி மகிழ்ந்தார் திருமதி தேவிபாலா அவர்கள்.

இடையிடையே, சங்க காலம் பற்றிய நல்ல பல சுவையான செய்திகளோடு, நிகழ்ச்சியை அழகுற நெறிபடுத்தி சென்றனர் திருமதி தேவிபாலா மற்றும் திருமதி தீபிகா. நன்றியுரை வழங்கிய திருமதி மஞ்சுளா மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் செல்வி ஜீவஜோதிகா அவர்களுக்கு அனைவரும் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் பாடி வாழ்த்துக் கூறினர்.

தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  14 ஆவது சந்திப்பு 08-12-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின் Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.


நன்றி !


மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்