Saturday 17 November 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 08-09-2018-ல் 11 ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (08-09-2018 அன்று 11 ஆவது நிகழ்ச்சி)

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

சிராங்கூன் சமூக மன்றத்தில் 08-09-2018 மாலை 5.30 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (11ஆவது நிகழ்ச்சிதமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "உலகில் சிறந்தது எது...?" என்னும் அழகியதோர் இசைப்பாடலை பாடினார் கவின்நிலா.

திருமதி. துளசிமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த மாத சந்திப்பில்வழக்கத்திற்காக மாறாக சிறுவர்கள் மாறுவேடத்தில் வந்து அசத்தினர்சந்தோஷ்குமார் திருநாவுக்கரசர் வேடத்தில் வந்து 'சொற்றுணை வேதியன்' என்றப் பாடலைப் பாடினார்தொடர்ந்து வந்த சமஸ்திகா விவசாயி வேடத்தில் கலப்பையுடன் வந்து சுவைபட பேசினார்.   ஜோஷிக்கா ஔவையார் வேடத்தில் வந்து 'ஒன்றானவன்' என்றுவரும் பாடலைப் பாடினார்ராதா மற்றும் கிருஷ்ணர் வேடத்தில் வந்தனர் இருவர் கெளஷிகா தீக்சிகாமுறுக்கு மீசையுடன் பாரதியாக வந்தார் கிருஷவ்.

முதன்முறையாக இலக்கிய நாடகங்களை அரங்கேற்றியது சிறப்பாகும். வாழ்வியல் இலக்கியப் பொழில் முதல் சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தவர்கள் ஜீவஜோதிகாபிரித்தீவ் மற்றும் சம்ரிதா. 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற மூதுரை பாடலுக்கான கருத்தோடு "நெருப்புடா..." என்ற தலைப்பில் நாடகம் அரங்கையே அதிர வைத்த முதல் நாடகத்தை அழகுற நடித்துச் சென்றனர். "வரும் ஆனா வராதுஎன்ற தலைப்புடன் வந்த இரண்டாவது சிறுவர் நாடகக் குழுவினர் நந்திகாஅன்யா மற்றும் விமல் கிடைக்க விதியிருந்தால் மட்டுமே கிடைக்க வேண்டியப் பொருள் கிடைக்கும் என்ற நல்வழிப் பாடல் கருத்துடன் களமிறங்கி நடித்து அனைவருடையப் பாராட்டையும் பெற்றனர்.

  
சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையாக 'தமிழில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் சிற்றுரை வழங்கினார்.

சிறு இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில்வேரும் விழுதும் அங்கத்தில் திருமதி சவிதா மற்றும் அவருடையப் புதல்வி பிரவிதா 'தொகைச்சொற்கள்' என்றதொரு தலைப்பில் முதல் 10 வரை விளக்கிய விதம் அருமைதொடர்ந்த இலக்கிய உரையில்விவேக சிந்தாமணி நூலில் இருந்து சில பாடல்களுகடன் வந்தார் திருமதி வினோதினிதிடீர் அழைப்பாக மேடையேறிவர் முனைவர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சிப் பற்றிய தமது கருத்தோடு, இவ்வகை அரிய வகை நிகழ்ச்சி சிங்கையில் தொடர்ந்து நடைபெறவும் வாழ்த்துரைத்தார்அவருடைய எளிய உரை அனைவரையும் கவர்ந்தது.

எதிர்வரும் முதலாமாண்டு ஆண்டுவிழாவின் ஒத்திகை நிகழ்ச்சியாக அமைந்த இந்த மாத நிகழ்ச்சியில்அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அங்கத்தினர் நடத்திய முதல் பட்டிமன்றத்தில் அழகுற பேசினர் இலக்கியக் குடும்ப அங்கத்தினர்மூவர் திருமதி தீபிகாதிருமதி உஷா மற்றும் திருமதி மஞ்சுளா இலக்கியக் கூற்றுகளைக் கற்றறிதல் எளியதே என்ற அணியிலும்திருமதி பவித்ராதிருமதி எழிலரசி மற்றும் திருமதி சங்கரி வலியதே என்ற அணியிலும் வலமான கருத்துகளுடனும்கலகலப்பாகவும் பேசினர்இவர்களில் யாரும் முதல்முறையாகப் பட்டிமன்றத்தில் பேசுவதாக இல்லாமல் தமது வாதங்களை நல்ல உச்சரிப்புடனும் உணர்வுடனும் பேசி அரங்கை அதிர வைத்தனர்தொடக்கவுரை முதல் முடிவுரை வரை இடையிடையே தக்க கேள்வி பதில்களுடன் பட்டிமன்றத்தை வழிநடத்திச் சென்றார் இன்று நாடக வசன கர்த்தா மற்றும் பட்டிமன்ற நடுவர் என்ற புதிய இரு அவதாரங்களில் வந்தார் அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி.

தமிழ்க் குடும்பங்கங்கள் பலகலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது. நன்றியுரை வழங்கிய திருமதி கோமதி மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார்நிகழ்ச்சி நெறியாளர்களாக திரு.கலியபெருமாள் மற்றும் திரு.கார்த்தி அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.



வாழ்வியல் இலக்கியப் பொழில் -  11 ஆவது சந்திப்பு 08-09-2018 நிகழ்ச்சியின்....
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:

காணொளியை இணையத்தில் காண இணைப்பு கீழே.
You tube link:

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.


First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி !

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment