Thursday 25 January 2018

வாழ்வியல் இலக்கியப் பொழில் 26-11-2017 முதல் ஆலோசனைக் கூட்டம்


கிழக்கு கடற்கரைப் பூங்காவில் முதல் ஆலோசனைக் கூட்டம்


கிழக்கு கடற்கரைப் பூங்கா
---------------------------------------
விடுப்பு விட்டு நான்கு நாட்கள்
விருப்பத்தோடு நான்கு குடும்பம்
ஒன்றுகூட உறுதியோடு
திட்டமிட்டு வந்தார் முன்னே
விட்டுவிட்டு மழைபொழியும்
வேட்கையோடும் களிக்க ஆசை
பாசிர் ரிஸ் கடற்கரை செல்ல
பாசத்தோடு ஏற்பாடு அனைத்தும்
பசுஞ்சோலை பரந்த வெளி
பாற்கடலின் கரையோரம்
மழைவந்தால் ஒதுங்கி நிற்க
மண்டபம் ஏதுமில்லை
கடைசி நேர மாற்றம் காண
கிழக்கு கடற்கரை பூங்கா செல்ல
கணக்கிட்டு பேருந்தில்
முனைப்புடனே மூன்று குடும்பம்
மாடி பேருந்தில் மடமடவென
மாறிமாறி இருக்கை கண்டார்
ஓரிரு பயணிகள் மட்டும்
ஒவ்வாத நிலையில் முகம் சுளிப்பு
களித்து மகிழந்து, கொள்ள இன்பம்,
கண்டுகொள்ளாவில்லை மற்றோர் வெறுப்பு
கூட்டுக்குடும்ப சூழல் ஒருமணி நேரம் பயணம் !
காலார கடந்து செல்ல
அரை மைல் தூரம் இருக்கும்
குடகுமலைக் காற்ற வரவேற்க
கடற்கரை சேர்ந்த நேரம்
வாட்டவில்லை வெயில் இன்று நண்பகல் முன்பு
நட்டுவைத்த மரங்கள் தான்
கருகருத்த நிழல் நாடி
கட்டாந்தரை யில்லை இங்கு
கல், மண் இல்லா புல்வெளி
விரிப்புகள் பரப்பி அமர
விநாடிகள் செல்ல செல்ல
வாழ்க்கையினை இரசித்த படி !
மிரட்ட வில்லை வானம்
இருண்டு இருந்தும்
இடி மின்னல் இல்லை எனினும்
இடமாற்றிக் கொள்ள ஆசை
மழைக்கு ஒதுங்கும் இடம் நாடி
முன்பதிவு இல்லாத போதும்
முன்னேற்பாடாய் ஒரு சிறு மண்டபத்தில்
விருப்பத்தோடு விரிப்பு விரித்து
விறுவிறுப்பாய் நிகழ்ச்சி தொடக்கம் !
கிஷோர் சஹா அவதரித்த நாளை
கிழக்கு கடற்கரையில் கேக் ஓளிர
மண்ணில் நல்ல வண்ணம் தேவாரம்
மணக்கும் தமிழில் தேனாய்ப் பாய !
சிற்பி இயற்றிய பாடல் வரிகள்
தமிழில் பிறந்தநாள் பாடல் ஒலிக்க...
பற்றவைத்த ஒற்றை மெழுகுவர்த்தி
பத்து வயதை விளக்கிச் சொல்ல
மெழுகுவர்த்தி ஒளியால்
தமிழ்பாடல் முடிந்த பின்னே
தாம் கற்ற உலகறிந்த பாடல் ஒன்று
ஆங்கிலம் வழி
அதனைத்தொடர்ந்து சிறார்களுடன் பெரியவர்கள் பாடிய வாழ்த்து !
குடும்பம் ! குதூகலம் !! கொண்டாட்டம் !!!
கடல்நீர் கால் நனைக்க
காத்திருந்த செல்வங்கள்
காலார நடந்து குளித்து
குதித்து ஆடியபடி...
வந்த வேளையின் ஒரு பகுதியாக
வாழ்வியல் இலக்கியப் பொழில்
ஆலோசனைக் கூட்டமும் தான் !
விளக்கம் வேண்டி வந்த சிலர்
விழைந்து வந்து சேர்ந்து கொள்ள
வினாக்களும் விடைகளும்
விருப்பத்தோடும் விவாதத்தோடும் !
இடைவேளையாக இடையில் உணவு
ஆஹா ஐந்து குடும்பம் சமைத்த
அறுசுவை உணவுகள்
வகைகள்
புளியோதரையின் சுவையான கலவை
கருவேப்பிலை எலுமிச்சை தயிர்சாதம்
வெஜ் பிரியாணி தேங்காய் சாதம்
கருணைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு பொரியல் அவியல்
ஒதுங்கி நின்ற ஊறுகாய்
MTR பூண்டின் சுவைக்காக கூடுதல் பிடியாக
நிறைவான உணவு
சிறுவயது கூட்டாஞ்சோறா ? இல்லை
கூட்டுக்குடும்ப சாயல் தானா ?
குறைவின்றி உண்டு மகிழ
குடும்ப வேவிகள் அறுபட்டன.
குளித்து மகிழ ஒரு சாரர்
குடும்ப கதை ஒரு சாரர்
இரண்டிற்கும் இடையே
களிப்பில் ஆழ்ந்து கண்ணயர்ந்த ஒரு சாரர் !
யாவரும் ஒன்று சேர மீண்டும் கொண்டாட்டம்
சிறிய சவுண்டு சிஸ்டம்
பாட்டுடன் பரதநாட்டியம்
பாடகர் நாட்டிய மேதைகளின் அரங்கேற்றம்
அத்தனையும் அருமை விறுவிறுப்பாக
சின்னஞ்சிறு கலைஞர்கள் பலரால்
ஒருமணி நேரம் ஓடியது கலகலப்பாய் !
பயணமாக ஆயத்தம்
பை பை சொல்லி இரு குடும்பம் செல்ல
காலார நாடினர் காப்பி கடைத்தொகுதி !
தே, தே-சி, மைலோ பானவகையோடு
இந்திய வகை பலகாரம்
மெதுவடை, மசாலா வடை, வெங்காய போன்டா
விருப்பத்தில் சிறிய அளவில் நொறுக்கு தீனி !
கணக்காய் வந்த பேருந்தில்
கால்வைக்க சிறு தயக்கம்
அரைநாள் கழித்த போதும்
முழுநாள் களிப்பாய் உணர்வு !
தொடர்ந்த மாடிப்பேருந்து பயணத்தில்
மலரும் நினைவலைகளை சுமந்தபடி
சுகமான அனுபவம்
பிரிய மனமின்றி பிரிந்தனர் புன்முறுவலோடு
மனநிறைவாய் வீடு சேர
முகத்திலாடும் இனியதொரு
என்றும் நிற்கும் பயணம் இது !
ஆவலோடு மீண்டும் மீண்டும் அசைபோட
இந்த வரிகள் மெருகூட்டும்
ஆழ்மனதில் நிறுத்தட்டுமே !
ஆக்கம்,
உங்களில் ஒருவனாய் பயணித்த படைப்பாளி.
சில படங்கள் கீழ்வரும் இணைப்பில்:
https://photos.app.goo.gl/ZlVTbmLah4ZDABwW2
Best Regards,
E. Krishnamurthy

No comments:

Post a Comment