வாழ்வியல் இலக்கியப் பொழில் 20-01-2018-ல் 3ஆவது சந்திப்பு
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (20-01-2018 அன்று 3 ஆவது நிகழ்ச்சி)
இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,
சிராங்கூன் சமூக மன்றத்தில் 20-01-2017 மாலை 6.00 மணிக்கு
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (3ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "அச்சுதம் கேசவம்" என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர் ஜீவஜோதிகா
மற்றும் அன்யா கண்ணன். "சக்தி சகித..." என்னும் அழகியதோர் சங்கீதப் பாடலை மனமுருகிப் பாடினார் சுசித்ரா. திருமதி
புவனா இராஜரெத்தினம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிராங்கூன்
சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழுவின் தலைவர் தலைவர் திரு.காளிமுத்து மற்றும் செயலவை உறுப்பினரும் கலந்துகொண்டு அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.
வழக்கம்போல ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக திருக்குறள்களைப் பாடினார், காணொளி வழியாக. கம்பராமாயணத்தில் இருந்து
ஒரு கதையை கொண்டு வந்தார் உல.பிரஜித். அழகியப்
பொங்கல் பாடலோடு வந்தார் பத்மநாபன். பாரதியார் பாடலை அழகாகப் பாடினார் சர்வினி.
நல்வழி நூலில் வந்த கடவுள்
வாழ்த்து மற்றும் ஈகைப் பற்றியச் சாதிகள் தவிர வேறில்லை என்று ஔவயார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும்
உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. சுத்தமான
உப்பு என்றத் தலைப்பில் ஒரு பரமார்த்த குரு கதையை
கூறினார் முரளிதரன்.
ஔவையார் பாடிய ஆத்திச்சூடி
109 வரிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார் அனிஷ்.
மனதில் உறுதி வேண்டும்
என்ற பாடலுன் வந்தார் சம்ரிதா. அவரைத்
தொடர்ந்து மழலை பாடல்களுடன் வந்தார் நிகிதா. சமிக்ஷா
திருக்குறளைப் பாடி மகிழ்ந்தார். திருவெம்பாவைப்
பாடலை மிகவும் அழகாகப் பாடினார் காவியா சரவணன். அழகிய
இரு கதைகளுடன் வந்தார் தான்யா. இருவர் ரக்ஷிகா மற்றும் தர்ஷிகா இணைந்து பாரதியார் பாடல்களை வழங்கினர். அடுத்து வந்த இருவர் ரிஷிகணேஷ் மற்றும் தேசிகராஜன்
ஆத்திச்சூடி கதைகளை வழங்கினர். அளித்தனர்.
இன்றைய நிகச்சியில்
சிறப்பு அம்சமாக "இன்றைய மாணவர்களுக்கு பண்டைய கலாச்சாரம் தேவையே !
தேவையில்லை ! " என்றத் தலைப்பில் சிறுவர் பட்டிமன்றம் முதல் முயற்சியாக நடைபெற்ரது. நடுவராக கவிஞர் மு.இராஜசேகரன்
இருந்து சிறப்புற வழி நடத்தினார்.
1. ரிஷிகணேஷ் (தேவையே)
2. கிஷோர்
(தேவையில்லலை)
3. கிருஷ்ண
தேவா (தேவை)
4. இரா.ஹமுதேஷ்
(தேவையில்லை)
நடைமுறையில் உள்ள
பிரச்சனைகளை மிகவும் யதார்த்தமாக தமது கருத்துகளாக வைத்து வாதிட்டனர். நடுவர்
அவர்களின் தீர்ப்பும் யாவரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தது போற்றத்தக்கது.
சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையை மிகவும் சுருக்கமாக கூறி மற்ற நிகழ்ச்சிகளுக்கு
வழிவிட்டார்.
இன்று இடைவேளையின்றித் தொடர்ந்த நிகழ்ச்சியில், சென்ற மாதம் இணைத்த புதிய அங்கமான சங்க கால
காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவர் மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய
விளக்கமும் கூறினர்.
தெனாலிராமன் காட்சியை சர்வினியும், ஔவையார் - முருகர்
காட்சியை ஜீவஜோதிகாவும், கண்ணகி - பாண்டிய மன்னர் சபைக் காட்சியை காருண்யாவும் வரைந்திருந்த
படங்கள் மிகவும் நேர்த்தியாக அவர்களின் திறமைகள்
வெளிக்கொணரப்பட்டன.
சங்க இலக்கிய உரையில், பட்டினப்பாலை
கூறும் காவிரிப்பூம் பட்டின நகரின் காட்சியை அடுத்து அங்குள்ள மக்கள் பகள் வேளையில் மாலைப்பொழுதில்
விளையாடும் விளையாட்டுகளைக் கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். தொடர்ந்த ஆசாரக்கோவை ஓர் அலசல் என்ற
தலைப்பில் திருமதி பவித்ரா கண்ணன்
வழங்கினார், பொங்கல் கவிதையுடன் வந்த கவிஞர் மதியழகன் அழகாகப் பாடினார். மேலும்
கூடுதல் சிறப்பாக கலைஞர் அவர்களைப் போலப் பேசி அசத்தினார். நாலடியார் கூறும் கற்றலின் தேவை என்ற தலைப்பில் முனைவர் சுகுணா உரை வழங்கினார்.
சிறப்புரையாற்ற வருகை
புரிந்திருந்த உலக திருவள்ளுவர் பேரவை சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் வள்ளியப்பன்
அவர்கள் "தமிழர் திருநாள்" என்ற தலைப்பில் திருக்குறள் கூறும் உழவர் பற்றியப் பாடல்களை
கோடிட்டுக்காட்டினார். அவர்களுக்கு நினைவுப்
பரிசாக பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
எழுதிய "பாமரை" மற்றும் "சிங்கப்பூர்
விருத்தம்" நூல்களை வழங்கி
மகிழ்ந்தார். ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினை தொடக்கம் முதலே பதிவு
செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன்
குடும்பமாக வந்திருந்து நிகழ்ச்சியை களிப்புற்றதோடு தனது மகளையும் மேடையேற்றி
திருவெம்பாவைப் பாடலை பாட வைத்து நிகழ்ச்சிற்கு சிறப்பு செய்திருந்தனர். திடீர் வரவாக வந்திருந்த TamilCube.com குழுமத்தின் இயக்குனர் திரு.அழகுப்பிள்ளை அவர்கள் நிகழ்ச்சியின் அங்கங்களை பார்வையுற்று
மகிழ்ந்தார், அடுத்துவரும்
நிகழ்ச்சிகளில் தமது பங்களிப்பையும் தருவதாகக் கூறி உறுதியளித்தார்.
சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் கவிஞர் சாவித்ரி செல்வராஜ்
அனுராதா சுரேஷ்பாபு நன்றியுரை வழங்க, பாடலாசிரியர்
அறிவுமதி அவர்களின் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை ஒளிபரப்ப, சுசித்ரா
அவர்களின் எட்டாவது பிறந்தநாள் வாழ்த்துகளோடு, தமிழில் பாடலைப் பாடி தமிழ்க் குடும்பங்கங்கள்
கலகலப்பான நிகழ்ச்சியை நிறைவு செய்து இரவு சிற்றுண்டியுடன் நிறைவேறியது.
நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி
மற்றும் விரிவுரையாளர் தேன்மொழியாள் அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.
வாழ்வியல் இலக்கியப்
பொழில் – 3 ஆவது சந்திப்பு படங்களை Google+ மூலம் பதிவேற்றம்
செய்துள்ளேன்.
புகைப்படங்களுக்கான இணைப்பு கீழே:
You tube link:
காணொளிகளுக்கான இணைப்பு கீழே:
வாழ்வியல் இலக்கியப் பொழில் - 3 ஆவது
சந்திப்பு 20-01-2018 (பாகம் 1/3)
வாழ்வியல் இலக்கியப் பொழில் - 3 ஆவது
சந்திப்பு 20-01-2018 (பாகம் 3/3)
முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil
நன்றி !
மரபுடன்,
எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப்
பொழில்
சிங்கப்பூர்
No comments:
Post a Comment