"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 09-12-2017-ல் 2ஆவது சந்திப்பு
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (09-12-2017 அன்று 2 ஆவது
நிகழ்ச்சி
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (09-12-2017 அன்று 2 ஆவது
நிகழ்ச்சி
தமிழ் உறவுகளுக்கு
வணக்கம்,
சிராங்கூன் சமூக மன்றத்தில் 09-12-2017 மாலை 5.30 மணிக்கு
வாழ்வியல். இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (2ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. ஆனத்த
நடனம் என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர் அன்யா கண்ணன். உருகாமல் இருக்காதய்யா என்ற சங்கீதப்
பாடலைப் மனமுருகிப் பாடினார் ஜீவஜோதிகா.
திருமதி துளசிமணி சத்தியமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்க, ஶ்ரீயா
ஶ்ரீராகவ் படைத்த பாரதியார் பாடல் மற்றும் கொன்றை வேந்தன் பாடல்கள் காணொளியாக
திரையில் காண்பிக்கப்பட்டது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளுடன் வந்தார் உல.பிரஜித். தங்க முட்டை என்ற
தலைப்பில் கதைக் கூறினார் சர்வினி. அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை அழகாகப்
பாடினார் ஜீவஶ்ரீ. சேர் இடம் அறிந்து சேர் என்ற ஆத்திச்சூடி கதையைக் கூறினார்
ஜீவஜோதிகா. தூங்கிய ஆறு என்றப் பரமார்த்த குரு கதையை கூறினார் முரளிதரன். ஒரு
நகைச்சுவை கதையுடன் வந்தார் ஹமுதேஷ். இளமையில் கல் என்ற ஆத்திச்சூடி கதையையும்
திருப்புகலூர் பற்றிய பக்தி இலக்கியச் செய்தியையும் கொண்டுவந்தார் கிஷோர்.
திருக்குறளும் விளக்கமும் வழங்கினார் கிருஷ்ண தேவா. இரட்டையர்கள் விஜய் சுந்தர்
மற்றும் விஜய் கிருஷ்ணா பழமொழிகளைக்கூறி விளக்கங்களும் அளித்தனர். சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக
உரையில் தமிழ்ச்சங்கம் பற்றியச் செய்திகளான தலைச்சங்கம், இடைச்சங்கம்,
கடைச்சங்கம் இவற்றின் அமைந்த காலம், அமைந்த
இடம், இயற்றியப் புலவர்கள், பாடியப்
புலவர்கள், இயற்றிய நூல்கள், அந்தந்த
கால இலக்கண நூல்கள் பற்றித் தெளிவாக தமது உரையில் குறிப்பிட்டார். தமிழ் இலக்கிய
சங்க கால நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு மற்றும் பதினெண்மேல்கணக்கு நூல்களின்
பட்டியிலிட்டும் அவை கூறும் செய்திகளையும் தமது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து,
ஔவையார் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்றத் தலைப்பில் உரையாற்றினார்
சந்தோஷ்.
இந்த மாத புதிய அங்கமாக, குறுக்கெழுத்துப் போட்டியில் பலர் ஆர்வமாக தங்களது விடைகளை
பூர்த்தி செய்து கொடுத்தனர்.
சிறிய இடைவேளையிக்குப் பின்
தொடங்கிய நிகழ்ச்சியில், இந்த மாதம் மேலும் ஒரு புதிய அங்கமான சங்க கால காட்சிகள்
ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற நால்வர் மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி
இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர்.
மனுநீதி சோழன் காட்சியை சர்வினியும், சோழ மன்னர்கள் பற்றி ஜீவஜோதிகாவும்,
தூங்கிய ஆறு காட்சியை முரளிதரனும் பாரதியார் படத்தை கிஷோரும் வரைந்த
நேர்த்தியான திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.
சங்க இலக்கிய வரலாறு என்ற தலைப்பில் கவிஞர் இராஜசேகரன், சிந்திக்க
சிரிக்க சிலேடைகள் என பேச்சாளர் பிரம்மகுமார், பட்டினப்பாலை
கூறும் காவிரிப்பூம் பட்டின நகரின் காட்சியை கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி, ஆசாரக்கோவை ஓர் அலசல் என்ற தலைப்பில் திருமதி பவித்ரா கண்ணன், பாட்டு இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் மதியழகன், நீதி
நூல் பயில் என்ற தலைப்பில் புலவர் விஜயசுதா ஆகியோர் உரைகள் வழங்க, இலக்கிய நூலிற்கு இலக்கணம் தொல்காப்பியம் தேவைப்படுவது போல் தனிமனித
ஒழுக்கத்திற்கு நெறிமுறைகள் தேவையென தமது சிறப்புரையில் வழங்கினார் நார்வேயில்
இருந்து வருகை புரிந்து கலந்து கொண்ட பொறியாளர் கி.அறவாழி, அவருடைய
நண்பரும் ஊடகவியலாளருமான திரு மணிமாறன் அவர்களும் இனிவரும் நிகழ்ச்சியில் எவ்வாறு
தமிழ்மொழியை பயன்படுத்த
திட்டங்கள் உளன என்பது பற்றி அடுத்தடுத்த
நிகழ்வுகளில் பகிர்ந்துகொள்வதாக உறுதியளித்தார். இறுதியாக குழந்தை பத்மநாபன்
தோசையம்மா தோசை என்றப் பாடலை பாடினார்.
சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் கவிஞர் சாவித்ரி செல்வராஜ். திடீர்
வரவாக தமிழகத்தின் பண்ருட்டியிலிருந்து வந்திருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு பாண்டு
அவர்கள் 100 மலர்களின் பெயர்களை இடைவிடாது தமிழில் மாலையாகவும் 198
நாடுகளின் பெயரையும் மிகவும் சரளமாக கூறியும், இடையிடையே பாடல்கள் மற்றும் நாடகபாணியில் திரைப்பட வசனங்களைக் கூறி
நிகழ்ச்சியை மெருகூட்டினார்.
சுரேஷ்பாபு நன்றியுரை வழங்க, பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் தமிழில் பிறந்தநாள்
வாழ்த்துப் பாடலை பிரிதி எடுத்துக்கொடுத்து, ஜீவஜோதிகா
அவர்களின் ஏழாவது பிறந்தநாள் கேக் வெட்ட, தமிழில் பாடலைப்
பாடி தமிழ்க் குடும்பங்கங்கள் கலகலப்பான நிகழ்ச்சியை நிறைவு செய்து இரவு
சிற்றுண்டியுடன் நிறைவேறியது.
நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி அனுராதாவும் திருமதி பவித்ராவும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.
வாழ்வியல் இலக்கியப் பொழில் – 2ஆவது சந்திப்பு படங்களை பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களுக்கு தேவையான படங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இணப்பு கீழே:
சிராங்கூன் சமூக மன்றத்தில் 09-12-2017 மாலை 5.30 மணிக்கு வாழ்வியல். இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சியின் (2ஆவது நிகழ்ச்சி) காணொளியை இணையத்தில் காணலாம்.
YouTube link:
No comments:
Post a Comment