Thursday 25 January 2018

தொடக்கவிழா

வாழ்வியல் இலக்கியப் பொழில் 11-11-2017 தொடக்கவிழா



சிராங்கூன் சமூக மன்றத்தில் இன்று 11-11-2017 மாலை 5.30 மணியளவில் உதயமானது இன்றொரு தமிழ் அமைப்பு.
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" என்றழைக்கப்படும் இந்த அமைப்பு திட்டமிட்டபடி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கவிநட்சத்திரம் ஜீவஜோதிகா கிருஷ்ணமூர்த்தி பரதநாட்டியத்தால் அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தினார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

        உஷா கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்க தொடர்ந்து மூன்று வயதே நிரம்பிய ஶ்ரீயா ஶ்ரீராகவன் அவர்களின் மழலைமொழியில் ஆத்திச்சூடியை வழங்கினார். மேலும் அ முதல் ஔ வரை உள்ள உச்சரிப்புகளை தகுந்த சொற்றொடர்களால் பாடி அரங்கில் இருந்தோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஓவைப்பாட்டியின் நல்வழியை வழங்கினார் கமலிகா. ஆதி கார்த்திகேயன் பழமொழிகளை கூறி அசத்தினார்.

       சிறார்களின் நிகழ்ச்சிக்கு இடையில் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி இந்த குழுமம் அமைத்ததன் நோக்கம் பற்றியும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கமாக கூறி எந்தெந்த இலக்கிய நூல்களில் "பொழில்" என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தன் அறிமுக உரையில் தன்னுடைய வெண்பாவினாலும் வேறொரு இலக்கியப்பாடலான வெண்பாவினாலும் விவரித்தார். கம்பராமாயணம், மணிமேகலை, தலைமகள் விடு தூது என்னும் நம்மாழ்வார் அருளிய திவ்ய பிரபந்தத்திலும் மேலும் நிகண்டுகள் வழி அதன் பொருளையும் எடுத்துரைத்தார்.

       விதையில்லா கத்திரிக்காய் என்ற தலைப்பில் நகைச்சுவை பொருந்த கதையை கூறினார் சர்வினி. K2 படித்துவரும் அன்யா மற்றும் ரக்‌ஷிகா இருவரும் சிறந்த பல நாட்டுபுறப்பாடல்களையும் தொடரந்து மீண்டும் மேடையேறினார் ஜீவஜோதிகா, பாரதியார் கவிதையை பாடி மகிழ்வித்தார். கிஷோர் பாரதிதாசன் கவிதைகள் வழங்க, அரங்கம் தமிழால் சுவையை கூட்டியது. ஜீவஶ்ரீ ஆத்திச்சூடி கதையை வழங்கினார். பரமார்ந்த குருவும் சீடர்களும் என்ற தலைப்பில் முரளிதரன் நகைச்சுவையோடு விறுவிறுப்பான கதையில் பயணிக்க வைத்தார். ஒரு புதிர் கநையோடு ரிஷி கணேஷ் விறுவிறுப்பாக சென்றது அரங்கம். கவின்நிலாவின் பாரதியும் எழுச்சியும் என்ற பேச்சு சிற்றுரையாய் சிலிர்க்க வைத்தது. மற்றொரு தெனாலிராமன் கதையைக் கொண்டுவந்தார் ஹமுதேஷ்; சொர்கத்திற்கு ஒரு பயணம் என்ற தலைப்பில் சிறப்பாக கதை சொல்லினார் கிருஷ்ணா தேவா.

         சிறுவர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த பரிசு பொருள்களை வழங்கி மகிழ்ந்தார் நெறியாளர்களில் ஒருவரும் அன்யாவின் தாயும் திருமதி பவித்ரா கண்ணன். அனைத்து சிறுவர்களையும் உற்சாகமூட்டும் வண்ணம் மேலும் அனைவருக்கும் ஒரு பரிசினை வழங்கினார் திரு பிரம்மகுமார்.
சிறு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த நிகழ்வில் பெரியவர்களின் உரை தொடங்கும் முன்பாக பார்வையாளர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. தமிழ் ஆர்வத்தை தூண்டிவிட்டதை உணர்ந்த பார்வையாளர்கள் சிறார்களுக்கும் பெற்றோருக்கும் இலக்கணப்பாடம் நடத்தவும், செம்மையாக தமிழைக் கற்க நிகழ்ச்சியில் புதிய அங்கம் இலக்கணத்திற்கும் அமைக்க கேட்டுக்கொண்டதற்கு, வரும் நிகழ்ச்சிகளில் புதிய அங்கமாக சேர்க்க எல்ல.கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

        உயர்நிலை மூன்றில் படிக்கும் மாணவர் சந்தோஷ், சங்க இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள் என்ற தலைப்பிலும் அவரைத் தொடர்ந்து வாழ்வியல் நெறிமுறைகள் என்ற தலைப்பில் கவிஞர் இராஜசேகரன், நீதி நூல்கள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் என்ற தலைப்பில் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தியும் இறுதியாக குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் திருமதி பவனேஸ்வரி இராஜரெத்தினம் உரையாற்றினர்.

        நாள்தோறும் நம் நடைமுறையில் மிக எளிதாக பயன்படுத்தக் கூடிய இயற்கை மருத்துவம் பற்றி கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கியதில் அரிய பல பயனுள்ள செய்திகள் இருந்தன.
நிகழ்வின் தொடக்கம் முதலே திருமதி அனுராதா சுரேஷ்பாபு மற்றும் திருமதி பவித்ரா கண்ணன் கலகலப்பாக நெறிபடுத்தி வந்தனர்.

       நன்றியுரை ஆற்றிய திரு சுரேஷ்பாபு சிராங்கூன் சமூக மன்ற அலுவலர்களிடம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் உதவி வருகிறார் என்பதை எல்ல.கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சுயுடன் தனது நன்றியைத் தெரிவித்து நெறியாளர்கள் நிகழ்ச்சியை நிறைவுசெய்து, இரவு உணவுடன் தொடக்கவிழா சிறப்புற நடைபெற்றது.






....




புகைப்படங்களுக்கான இணைப்பு:
https://photos.app.goo.gl/JDkEfHRAEUGcLtxl1




YouTube வழியாக காணலாம்.
வாழ்வியல் இலக்கியப் பொழில் - தொடக்க விழா 11-11-2017
காணொளிகள் முழுமையாக இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



வாழ்வியல் இலக்கியப் பொழில் - தொடக்க விழா 11-11-2017 காணொளி ...
பாகம் - 1 (சிறுவர்கள் நிகழ்ச்சி வரை)


 




பாகம் - 2 (பெரியவர்களின் உரை மற்றும் மருத்துவக் குறிப்பு)

https://youtu.be/dsHkrhEEcJc




நன்றி !


 


மரபுடன்,


பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி


வாழ்வியல் இலக்கியப் பொழில்


சிங்கப்பூர்


 



 

No comments:

Post a Comment