Sunday 3 June 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் - காரைக்குடி கிளை தொடக்க விழா 27-05-2018

 

சிங்கப்பூரில் இயங்கிவரும் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" என்ற தமிழ் அமைப்பின் காரைக்குடி - கிளை தொடக்க விழா நிகழ்ச்சி (27-05-2018 அன்று முதலாவது சந்திப்பு)

 

இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,

 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் உள்ள சுப்பையா அம்பலம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 27-05-2018 காலை 10.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் - காரைக்குடி கிளை தொடக்க விழா மற்றும் மாதாந்திர முதல் நிகழ்ச்சி....

 

வேர்காணும் விழுது சந்திப்பு

 

வாழ்வியல் இலக்கியப் பொழில்

காரைக்குடி - கிளை

 

-: தொடக்க விழா :-

 

விதை பிளந்து விண் பிளந்து

வேரூன்றி விருட்சமாகி,

வெளிக்காற்றை உள்வாங்கி,

மாசற்ற காற்றை வெளியாக்கி

உலக உயிர்களை வாழ்விக்கும்

தாவரமே ஓரறிவு உயிரென்பர்.

 

தனித்தனி வளமான மரங்கள் போதாது; தரணியிலே தழைத்தோங்கும் விருட்சமெல்லாம் தானாக ஒன்றிணைய தனியொருத் தோப்பாகும். தன்னிடத்தே தங்க வரும் ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு ஏன் ஆறறிவு மாமனிதம் தழைத்து வளர, தான் வளர்ந்து, தான் கொண்ட நிழல், கொழுத்த பழம், குடியிருக்க வீடமைக்க, தான் இருக்கும் போதும் தானழிந்த போதும் தயவாக இருக்கின்ற மரங்கள்; அவைதான் நமக்கு உரங்கள் !

 

வாழ்வியல் இலககியப் பொழில் கடந்த ஆண்டு 2017 நவம்பர் மாதம் சிங்கப்பூர் மண்ணில் உதயமானது. இன்று (27-05-2018 ஞாயிற்றுக்கிழமை) தாய்மண்ணில் வேரூன்றும் விழுதாகி வாழ்வியல் இலக்கியப் பொழில் காரைக்குடி - கிளைதொடக்க விழா திட்டமிட்டிருந்தபடி 27-05-2018 அன்று காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

 

தெய்வப்புலவர் திருவள்ளுவர் வகுத்தளித்த அறம், பொருள  மற்றும் இன்பம் என்ற மூன்று தலைப்புகளில் முத்தமிழ் அன்னைக்கு அணிகளாக அமைத்து உரையாற்றியது தொடக்க விழாவில் சிறப்பு அம்சமாகும்.

 

சங்க இக்கியத்தில் அறம்என்ற தலைப்பில்

புலவர் பொன்னையன் ஐயா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவர் எனக்கு நேர் நேர் தேமா என எனக்கு மரபுக்கவிதைக்கு அச்சாரம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை யான் கண்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுத்து எனக்கு ஊக்கமூட்டி வரும் ஒரு சிறந்த பணபாளர்; தமிழ்ப் பண்பாளர்.

 

சங்க இக்கியத்தில் பொருள்என்ற தலைப்பில் விழாவிற்கு முன்னிலை வகுத்த காரைக்குடி

அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் திரு.M பாண்டி ஐயா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, இத்தகைய அரிய நிகழ்ச்சியைப்பற்றி தமது முதுகலை மாணவர்களுக்கு கொண்டுசெல்லவும் பேராவலாக உள்ளார் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

 

தொடர்ந்து காரைக்குடி இராமநாதன் செட்டியார் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பீட்டர் ராஜா அவர்கள் மிகவும் சுருக்கமாக தமது வாழ்த்துரையை வழங்கினார். அடுத்துவரும் நிகழ்ச்சிகளை தமது பள்ளியில் நடத்திட இடம்கொடுக்க முன்வந்துள்ளார்.  மேலும் தமது பள்ளி மாணவர்களை இத்தகைய நிகழ்ச்சியில் பங்கெடுத்து பயன்பெற வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார் என்பது சிறப்பாகும்.

 

அடுத்ததாக, “சங்க இக்கியத்தில் இன்பம்  என்ற தலைப்பில் திருச்சிராப்பள்ளி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும்

முனைவர் திரு.அமிர்தகடேசுவரர் ஐயா அவர்கள்

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் நடத்திய தமிழ்மொழி மாத சிறப்பு நிகழ்ச்சியான இலக்கியச் சங்கமம் - 2018” ல் கலந்து கொண்டு சிறப்பு இலக்கியச் சொற்பொழிவாறலறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறுவர் நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை ஊக்கமூட்டினார் செல்வி

யோகஸ்ரீ பாலமுருகன்.

 

தொடர்ந்து வந்த செல்வி ஜீவிகா பாலமுருகன்

யோகா உடற்பயிற்சிகளை மேடையில் அரங்கேற்றம் செய்தார்.

 

படித்ததில் பிடித்தது அங்கத்தில் தனக்கு பிடித்த பாடலை சிறப்புற வழங்கினார் யோகஸ்ரீ பாலமருகன்.

 

மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் புலவர் அ.பொன்னையன் அவர்கள். துணை அங்கமாக

உணவே மருந்துஅங்கத்தில் இயற்கை உணவை எளிமையாகவும் அளவோடும் உணவை உண்டு மகிழ்ந்துவருபவர்கள்,

ஊன் வளர்ப்பதை விட மருந்தாக உணவை உட்கொள்ள மகத்தான நோயற்ற வாழ்வையும்

நீண்ட ஆயுளையும் பெறலாம் என விவரித்தார் திருமதி. ஆணந்தி.

 

சிறப்புரையாற்றிக் கவிஞர் கா.பெரியசாமி

வாழ்வியல் இலக்கியப் பொழிலின் நோக்கம் பற்றியும் சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின்  சிறப்புகள் பற்றியும்

சங்க இலக்கியத்தில் தேடல் கொண்ட யாவருக்கும் பல்சுவை விருந்தைப் படைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

 

நெறியாளராக சிங்கையில் வசித்து வரும் பொறியாளர் திரு.குமரேசன் அவர்கள் அழகுற வழிநடத்திச் சென்றார். மதிய உணவோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

 

அடுத்த மாத நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்ற செய்தியோடு அனைவரும் விடைபெற்றனர்.

 

புகைப்படங்களுக்கான இணைப்பு:

https://photos.app.goo.gl/mRVsF089HzyCEn942

 

காணொளிகளுக்கான இணைப்பு:

https://youtu.be/XZv7drNgYw0

 

வலைப்பதிவிற்கான இணைப்பு:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.sg

 

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya

Last name: Pozhil Singapore

 

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்

Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.

 

மரபுடன்,

 

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

தலைவர்

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர் மற்றும் காரைக்குடி.

No comments:

Post a Comment