Sunday 13 May 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 12-05-2018-ல் 7ஆவது சந்திப்பு

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (12-05-2018 அன்று 7 ஆவது நிகழ்ச்சி)
 
இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,
 

சிராங்கூன் சமூக மன்றத்தில் 12-05-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி....

தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு.
தாரிக தம் தஜம் தரிஜா... என்றதொரு இசைக்கு பரதநாட்டியம் ஆடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சுசித்நிரா. ஶ்ரீகண நாதா சிந்துர்ர... என்ற பாடலை இசைபாடிச் சென்றார் சம்ரிதா.
வந்தோரை வரவேற்று மகிழ்ந்தார் திருமதி துளசிமணி.
 
சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில் முதலாவதாக ஜீவஜோதிகா, மூதுரையில் இருந்து  இரண்டு பாடலோடு கருத்துகளையும் கூறினார். தொடர்ந்து வந்த ஜோஷிகா, நண்பர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அழகியதோர் நன்னெறிக் கதையைக் கூறினார். அடுத்து வந்த சர்வினி கொன்றை வேந்தன் வரிகளை வழங்கினார்.

விமல் நனரனெரிக்கதையை பாடலோடு வழங்கினார். சமிக்‌ஷா சங்க இலக்கிய நூல்களின் பட்டியலை பதினெண்மேல்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள் ஆகியவற்றை தொகுத்தளித்தார். காணொளி வழியாக தொடர்ந்த ஶ்ரீயா நிற்பதுவே நடப்பதுவே என்ற பாரதியார் பாடலை அழகுற பாடினார். ஆசிபா தஸ்னீம் ஆமையும் முயலும் கதையை சுவைபட கூறினார். மழலையர் பாடல்களோடு வந்த நிகிதா, அப்பா பாடலையும்,காகம் ஒன்று காட்டிலே தாகத்தோடு தவித்தது என்ற பாடலையும் சுவைபட பாடினார்.

தொடர்ந்து வந்த கௌஷிக் வாழ்க நிரந்தரம் என்ற பாரதியார் பாடலையும், அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலையும் கம்பீரமாக பாடினார். பிரதக்‌ஷிதா மணியே மணியின் ஒலியே என்ற அபிராமி அந்தாதி பாடலைப் பாடினார். தொடர்ந்து வந்த தனீஸ்ராஜ் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை பாடினார். சிவானி கெடுவான் கேடு நினைப்பான் என்ற கருத்தை கதை மூலம் விளக்கினார். வாசினி சங்க இலக்கிய நூல்கள் வரலாற்றை வழங்கினார். ஶ்ரீவிகாஷ் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை பாடிச் சென்றார். அஸ்வின் அறிவுள்ள காகம், முயலும் ஆமையும், சிங்கமும் சுண்டெலியும் என மூன்று கதைகளை கூறிச் சென்றார். கௌஷிகா, ஒளிபடைத்த கண்ணனாய் வா வா என்ற பாரதியார் பாடலைப் பாடினார்.

 

சிறுவர்கள் அங்கத்தை தொடர்ந்து வந்த வாழ்வியல் இலக்கியப் பொழிலின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, தமது அறிமுக உரையில் அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்என்ற தலைப்பில் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டி இப்புவியில் ஐம்பூதங்களாக குறிப்பிடுவனவற்றையும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை பட்டியலிட்டும் தொகுத்தளித்தார்.

 
சிறு இடைவேளைக்குப் பின் தொடங்கியவேரும் விழுதும்என்ற புதிய அங்கத்தில் திருமதி. கோமதி மற்றும் அவருடைய புதல்வன் பிரித்திவ் சேர்ந்து பழமொழியின் விளக்கமும் கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்என்ற பழமொழி மருவி தற்போது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்என்பது பற்றி சிறப்புற வழங்கினர்.
 

பெரியவர்கள் உரையில், மருத்துவர் திருமதி.அன்னபூரணி சிறுபஞ்சமூலம் (பாகம்-2) பாடல்களை அழகுற விளக்கினார்.  நான்மணிக்கடிகை நூலில் இருந்து சில பாடல்களை விளக்கி உரையாற்றினார் திருமதி. ராதிகா. பழமொழி நானூறு நாலில் இருந்து சில பாடல்களை விளக்கினார் திருமதி. மஞ்சுளா. முதுமொழிக்காஞ்சி நூலில் வந்த துவாப்பத்து பகுதியில் உள்ள பத்து முதுமொழி வரிகளை விவரித்தார் திருமதி. தீபிகா. ஐங்குறுநூறு நூலில் இருந்து சில பாடல்களை குறிப்பிட்டு உரையாற்றினார் திருமதி. பவித்ரா.
 
கவிதையும் கானமும் அங்கத்தில் தமிழ் மொழியைப் போற்றி தாம் வடித்த கவிதை ஒன்றை அழகுற படைத்து மகிழ்ந்தார் திருமதி. பிரபாதேவி.
 
வழக்கமான மருந்துவ குறிப்புகளுடன் வந்திருந்த கவிஞர் சாவித்திரி இந்த முறை புதியதாக மேலும் ஒருவர் பிசியோதெரபி பற்றி அறிமுக உரையாற்றி, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் செய்முறையோடு விளக்குவதாகவும் கூறிச் சென்றார்.

 
நன்றியுரை வழங்கிய திருமதி.மஹாஜபின் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்தார். அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் திருமதி கோமதி மற்றும் திருமதி.தீபிகா.
 

தமிழில் பிறந்தாள் வாழ்த்து பாடல் பாடி இந்த மாதம் பிறந்தநாள் குழந்தைகளை மேடையேற்றி வாழ்த்துகளை தெரிவித்ததோடு நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது.

 

 

வாழ்வியல் இலக்கியப் பொழில் -  7 ஆவது சந்திப்பு 12-05-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:
https://photos.app.goo.gl/mLKoKYjiOdaOOpCn1

 
காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.
You tube link: (விரைவில் பதிவிடுவோம்)

 

வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:
www.vazhviyalilakkiyapozhil.blogspot.com

 

முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil Singapore

 

மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்
Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.
 

நன்றி !


மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்

No comments:

Post a Comment