Wednesday, 14 February 2018


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 13-02-2018-ல் மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018.

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் முதல் கலை நிகழ்ச்சி (13-02-2018 அன்று மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018)


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


சிராங்கூன் நார்த் அவின்யூ 1-ல் இருக்கும் தரும முனீஸ்வரன் ஆலயத்தில் 13-02-2018 இரவு 9.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018 தொடங்கியது. "லிங்கோஷ்டகம்" பாடினார் ரக்ஷிகா. தொடர்ந்து வந்த நந்திதா "ஊருகாமல் இருக்காதய்யா...." எனும் அழகியதோர் சங்கீதப் பாடலை பாடினார். தேவாரக் குழுவினர் தேவார பாடல்கள் பாடினர்.


சிறுவர்கள் பங்கேற்ற அங்கத்தில் முதலாவதாக வந்த சுசித்திரா, சிவராத்திரி பற்றியக் கதை ஒன்றை கூறினார். தொடர்ந்த சர்வினி தனது சிற்றுரையில் தனக்கு தெரிந்த திருமூலர் இயற்றியத் திருமந்திர பாடலான "சிவசிவ என்கிலர்...." பாடி பொருளும் கூறினார். சிவராத்திரி என்றால் என்ன ? என்ற ஒரே தலைப்பில் பல சிற்றுரைகளை ஆற்றிய மாணவர்கள் தன்யா, ரிஷிகணேஷ், தேசிகராஜன் மற்றும் கிஷோர் பல பயனுள்ள அரியத் தகவல்களை சுவைபட வழங்கினர்.


பெரியவர்கள் வழங்கிய உரையில் திருமதி பவித்ரா கண்ணன் "முக்தி தரும் சிவராத்திரி" என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக வந்த வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு எல்ல.கிருஷ்ணமூர்த்தி மஹா சிவராத்திரி நன்னாளில் ஓத வேண்டியச் சில பதிகங்களைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்துவைத்தார்.


ஆலய மேலாண்மைகுழுவினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பளிப்பு அளிக்க கலைநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



வாழ்வியல் இலக்கியப் பொழில் -  மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018

13-02-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/mbu2KTMbuVMQSHAh1


காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.




வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.com



முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

First name: Vazhviyal Ilakkiya

Last name: Pozhil Singapore


மேற்கண்ட இணைப்பில் சிரமம் இருப்பின்

Krishnamurthy Singapore என்ற இணைப்பில் இணைக்க விருப்பம் தெரிவிக்க இணைக்க ஏதுவாக இருக்கும்.


நன்றி !


மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 10-02-2018-ல் 4 ஆவது நிகழ்ச்சி


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (10-02-2018 அன்று 4 ஆவது நிகழ்ச்சி)


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


சிராங்கூன் சமூக மன்றத்தில் 10-02-2018 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (4ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "சாரச நேத்ர பாரகுநா..." என்னும் அழகியதோர் சங்கீதப் பாடலை பாடினார் சுசித்திரா. "ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா..." என்னும் அழகியதோர் பக்திப் பாடலை பாடினார் காருண்யா.


திருமதி அன்னபூரணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.


வழக்கம்போல ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக "குற்றாலக் குறவஞ்சி" பாடல் வரிகளை பாடினார் காணொளி வழியாக. தொடர்ந்து வந்த நிகிதா மழலைப் பாடலை அழகாகப் பாடினார்.  சர்வினி புத்தியில்லாதவரிடம் பொறுப்புகளைக் கொடுக்க கூடாது என்பதை விளக்கும் நல்லதொரு கதையை "தோட்டக்காரனும் குரங்குகளும்" என்ற தலைப்பில் வழங்கினார்.


ஆசாரக்கோவை என்ற நூலில் இருந்து வாழ்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தொகுத்து வழங்கினார் அன்யா கண்ணன். மூதுரை நூலில் வந்த கடவுள் வாழ்த்து மற்றும் செய்நன்றி பற்றிய ஔவையார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும் உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. தமிழ் இலக்கனம் என்ற தலைப்பில் தமிழில் நாம் அறிந்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய பலவற்றை நினைவு படுத்திச் சென்றார் சமிக்ஷா. ஔவையாரின் வாழ்க்கை வரலாற்றை ஔவையார் வேடமிட்டே வந்து அசத்தினார் தன்யா. அடுத்து வந்த பிரமோத்வர்ஷன் பல்வேறு அதிகாரங்களில் இருந்து திருக்குறள் பலவற்றைக் கூறிச் சென்றார். ஏமாற்றிப் பொருள் சேர்த்தால் அது எவ்வகையில் விரையம் ஆகும் என்பதை அழகிய திருக்குறள் கதை மூலம் விளக்கினார் சம்ரிதா.


நிதிஷ்ராஜ், வாழ்க்கை என்றால் என்ன என்பதை ஒரு அழகியக் குட்டிக்கதை மூலம் சுவைபடக் கூறினார். "யாரையும் நம்பாதே" என்ற தலைப்பில் அழகிய கதையை கூறினார் தேசிகராஜன். மேடையில் தம் வயது நண்பர்கள் படைக்கும் உரைகளைப் பார்த்து உற்சாகமாகி, தானும் சிற்றுரை நிகழ்த்த, கரும்பாக மாறி இனிப்பாக பேசினார் நந்திதா.


சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையாக, சங்க கால நூல்கள் வெளிவந்த நூல்களின் நூற்றாண்டு வாரியாக, எவ்வாறு பிரிக்கப் பட்டுள்ளன என்பதை சுருக்கமாக கூறினார். அவற்றுள் அக்கால இலக்கியமாக சங்க இலக்கியம் மற்றும் நீதி இலக்கியம், இடைக்கால இலக்கியமாக பக்தி இலக்கியம், தல வரலாறு, பிற மத இலக்கியம், அதனைத் தொடர்ந்து இக்கால இலக்கியமாக உரைநூல்கள், கதை, கட்டுரை, ஆய்வுநூல்கள் என விரிவடைந்து இன்றைய நாளில் அறிவியல் தமிழ் மற்றும் கணிணி தமிழ் என இலக்கிய வளர்ச்சி குறிப்பிடத்தக்கவை ஆகும்.


சிறு இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், ஓவியம் வரையும் ஆற்றலை வளர்க்கும் அங்கமா சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவரின் ஓவியங்கள் திரையிடப்பட்டன. மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர்.

திருவள்ளுவர் படத்தை சர்வினியும், கவிச் சக்கரவர்த்தி கம்பர் பட்த்தை ஜீவஜோதிகாவும், ஔவையார் படத்தை டாண்யாவும், ரைந்திருந்தனர். அனைத்து படங்களும் மிகவும் நேர்த்தியாகவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பாகவும் இருந்தது என்றால் அது மிகையல்ல.


சங்க இலக்கிய உரையில், பட்டினப்பாலை கூறும் காவிரிப்பூம் பட்டின இரவு நேர நிகழ்வுகள்  காட்சியை தொகுத்து வழங்கினார் கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அடுத்ததாக, ஏலாதி என்ற நூலில் இருந்து ஐந்து பாடல்கள் மூலம் நல்ல பல தகவல்களை வழங்கினார் திருமதி பவித்ரா கண்ணன். தொடர்ந்து வந்த திருமதி துளசிமணி, "சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்" என்ற தலைப்பில் அழகியதோர் சிற்றுரையை வழங்கினார். வழக்கம் போல் பாடலுடன் வந்த கவிஞர் மதியழகன் அழகாகப் பாடினார்.


திடீர் இணைப்பாக பன்மொழி வித்தகர் திரு முத்தழகு மெய்யப்பன் மேடைக்கு அழைக்கப்பட்டார், அவருடைய உரையில் பல மொழிகளை கற்க வேண்டியதின் அவசியத்தையும், அதற்காக சிங்கப்பூரில் இருக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ளவும், அதிக செலவில்லாமல், எவ்வகையில் இணையம் மூலம் பல மொழிகளை கற்க முடியும் என்பதையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வந்த கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள், தமது குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை வைக்க அன்போடு வேண்டுகோள் வைத்து, நிகழ்ச்சியில் தாம் கண்டவற்றை அனுபவமாக வழங்கினார்.


சிறப்புரையாற்ற வருகை புரிந்திருந்த திருவாரூர் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் புலவர் மு.சந்திரசேகரன் அவர்கள் "அகத்திணை" என்ற தலைப்பில் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். வரும் நிகழ்ச்சிகளில் சங்க இலக்கியக் காட்சிகளை மாணவர்கள் நடித்துக் காட்டுவதன் மூலம் வாழ்வியல் இலக்கியப் பொழில் எளிதில் தமது இலக்கிகை அடைய  முடியும் என ஆரோக்கியமான நல்ல யோசனைகளையும் வழங்கினார்.


ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினையும், தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் நிகழ்ச்சியில் வந்த பல அங்கங்களையும் கண்டு களிப்புற்றார்.  


தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது. நன்றியுரை வழங்கிய கவிஞர் மு.இராஜசேகரன் மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி மற்றும் விரிவுரையாளர் தேன்மொழியாள் அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.



வாழ்வியல் இலக்கியப் பொழில் – 4 ஆவது சந்திப்பு படங்களை மின்னஞ்சல் வழி அனுப்புவதில் சிரமம் (1 படம் 8MB SIZE) இருப்பதால் Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களுக்கு தேவையான படங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருகைப் பதிவேட்டில் தங்களுடைய மின்னஞ்சல் விவரங்களைக் கொடுத்திருப்போருக்கு மின்னஞ்சல் வந்திருக்கும், அப்படி மின்னஞ்சல் கிடைகாதவர்கள் ekrishnamurthy@yahoo.com மற்றும் ilakkiyapozhil@gmail.com ஆகிய மின்னஞ்சல் வழி தொடர்புகொள்ளலாம்.


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  4 ஆவது சந்திப்பு 10-02-2018 நிகழ்ச்சியின்....

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:

https://photos.app.goo.gl/YYK0MXoAjBLsP5nj2

காணொளியை இணையத்தில் காண ணைப்பு கீழே.




வலைப்பதிவிற்காண இணைப்பு கீழே:

www.vazhviyalilakkiyapozhil.blogspot.com



முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg


நன்றி !


மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

Tuesday, 30 January 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 28-01-2018 முதல் பொங்கல் நிகழ்ச்சி

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் அங்கத்தினர் பங்கேற்ற கொண்ட முதல் பொங்கல் நிகழ்ச்சி (28-01-2018 அன்று சிராங்கூன் சமூக மன்றத்தில்....
இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,
சிரங்கூன் சமூக மன்ற பொங்கல் நிகழ்ச்சியில் வாழ்வியல் இலக்கியப் பொழில் பங்கேற்றது நமக்கு அடுத்த மைல்கல் எனலாம். கிடைத்த வாய்ப்பினை அனைவரும்
சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.
சிராங்கூன் சமூக மன்றம் நடத்திவந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமான நமது அங்கத்தில்,
அச்சுதம் கேசவம்என்ற அழகியப் பாடலுக்கு நடனம் ஆடி தொடங்கி வைத்தனர் ஜீவஜோதிகா மற்றும் அன்யா. சக்தி சகித கணபதிம்என்ற சங்கீதப்பாடலை சிறப்பாக பாடினார் சுசித்ரா.
தொடர்ந்து வந்த சர்வினி காக்கைச் சிறகினிலேஎன்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார். பாரதிதாசன் கவிதைகளைப் பாடினார் கிஷோர். பரமார்த்த குரு கதைகளில் ஒன்றான சுத்தமான உப்புஎன்ற தலைப்பில் கதையைக்கூறினார் முரளிதரன்.
சிறார்களைத் தொடர்ந்து கவிஞர் மதியழகன் பொங்கல் கவிதை ஒன்றை எழுதிப் பாடி மகிழ்ந்தார். இறுதியாக வந்த வாழ்வியல் இலக்கியப் பொழில்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி மரபுக்கவிதை ஒன்றை பச்சரிசி பொங்கல்தலைப்பில் எழுதி
வந்து பாடினார். இந்த இரண்டு கவிதைகளும் சமீபத்தில் சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8ல் ஒலிபரப்பு ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் நிகழ்ச்சியின் நெறியாளர்கள் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் நிகழ்ச்சியின் இடையிடையே வழங்கியதோடு புதிதாக உறுப்பினராக சேர விழைவோர்க்கு தேவையான விளக்கங்களோடு அனைவருக்குமான சான்றிதழ்கள் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களை மேடையில் வழங்கினார்கள்.
குடும்பமாக வந்திருந்த பல வாழ்வியல் இலக்கியப் பொழில் இலக்கியக் குடும்பத்தினர் பொங்கல் விருந்தோடு இலக்கிய விருந்தையும் பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள் என்றார் மிகையாகாது.
சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கும் புகைப்படத்தோடும் குழு புகைப்படத்தோடும் செல்ல சந்திப்பு அழகுற நடைபெற்றது.
வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சியின் டங்களை Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன்.
சில புகைப்படங்களை கீழ்கண்ட பதிவேற்றம் செய்துள்ளோம்.
புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:
YouTube link:
காணொளிகளுக்கானணைப்பு கீழே:

 
வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சியின் தொகுப்புகளை கீழ்கண்ட Blog மூலம் காணலாம்.
https://vazhviyalilakkiyapozhil.blogspot.com
முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil

நன்றி !
மரபுடன்,
எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்
வாழ்வியல் இலக்கியப் பொழில் 20-01-2018-ல் 3ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (20-01-2018 அன்று 3 ஆவது நிகழ்ச்சி)


 


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


 


சிராங்கூன் சமூக மன்றத்தில் 20-01-2017 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (3ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "அச்சுதம் கேசவம்" என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர் ஜீவஜோதிகா மற்றும் அன்யா கண்ணன்.  "சக்தி சகித..." என்னும் அழகியதோர் சங்கீதப் பாடலை மனமுருகிப் பாடினார் சுசித்ரா. திருமதி புவனா இராஜரெத்தினம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிராங்கூன் சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழுவின் தலைவர் தலைவர் திரு.காளிமுத்து மற்றும் செயலவை உறுப்பினரும் கலந்துகொண்டு அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.


 


வழக்கம்போல ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக திருக்குறள்களைப் பாடினார், காணொளி வழியாக. கம்பராமாயணத்தில் இருந்து ஒரு கதையை கொண்டு வந்தார் உல.பிரஜித். அழகியப் பொங்கல் பாடலோடு வந்தார் பத்மநாபன். பாரதியார் பாடலை அழகாகப் பாடினார் சர்வினி.


நல்வழி நூலில் வந்த கடவுள் வாழ்த்து மற்றும் ஈகைப் பற்றியச் சாதிகள் தவிர வேறில்லை என்று ஔவயார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும் உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. சுத்தமான உப்பு என்றத் தலைப்பில் ஒரு பரமார்த்த குரு கதையை கூறினார் முரளிதரன்.


ஔவையார் பாடிய ஆத்திச்சூடி 109 வரிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார் அனிஷ்.


மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலுன் வந்தார் சம்ரிதா. அவரைத் தொடர்ந்து மழலை பாடல்களுடன் வந்தார் நிகிதா. சமிக்ஷா திருக்குறளைப் பாடி மகிழ்ந்தார். திருவெம்பாவைப் பாடலை மிகவும் அழகாகப் பாடினார் காவியா சரவணன். அழகிய இரு கதைகளுடன் வந்தார் தான்யா. ருவர் ரக்ஷிகா மற்றும் தர்ஷிகா இணைந்து  பாரதியார் பாடல்களை வழங்கினர். அடுத்து வந்த இருவர் ரிஷிகணேஷ் மற்றும் தேசிகராஜன் ஆத்திச்சூடி கதைகளை வழங்கினர். அளித்தனர். 


 


இன்றைய நிகச்சியில் சிறப்பு அம்சமாக "இன்றைய மாணவர்களுக்கு பண்டைய கலாச்சாரம் தேவையே ! தேவையில்லை ! " என்றத் தலைப்பில் சிறுவர் பட்டிமன்றம் முதல் முயற்சியாக நடைபெற்ரது. நடுவராக கவிஞர் மு.இராஜசேகரன் இருந்து சிறப்புற வழி நடத்தினார்.


1. ரிஷிகணேஷ்  (தேவையே)


2. கிஷோர் (தேவையில்லலை)


3. கிருஷ்ண தேவா (தேவை)


4. இரா.ஹமுதேஷ் (தேவையில்லை)


 


நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை மிகவும் யதார்த்தமாக தமது கருத்துகளாக வைத்து வாதிட்டனர். நடுவர் அவர்களின் தீர்ப்பும் யாவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தது போற்றத்தக்கது.


 


சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையை மிகவும் சுருக்கமாக கூறி மற்ற நிகழ்ச்சிகளுக்கு வழிவிட்டார்.


 


இன்று இடைவேளையின்றித் தொடர்ந்த நிகழ்ச்சியில், சென்ற மாதம் இணைத்த புதிய அங்கமான சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவர் மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர்.


தெனாலிராமன் காட்சியை சர்வினியும், ஔவையார் - முருகர் காட்சியை ஜீவஜோதிகாவும், கண்ணகி - பாண்டிய மன்னர் சபைக் காட்சியை காருண்யாவும் வரைந்திருந்த படங்கள் மிகவும் நேர்த்தியாக அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.


 


சங்க இலக்கிய உரையில், பட்டினப்பாலை கூறும் காவிரிப்பூம் பட்டின நகரின் காட்சியை அடுத்து அங்குள்ள மக்கள் பகள் வேளையில் மாலைப்பொழுதில் விளையாடும் விளையாட்டுகளைக் கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். தொடர்ந்த ஆசாரக்கோவை ஓர் அலசல் என்ற தலைப்பில் திருமதி பவித்ரா கண்ணன் வழங்கினார், பொங்கல் கவிதையுடன் வந்த கவிஞர் மதியழகன் அழகாகப் பாடினார். மேலும் கூடுதல் சிறப்பாக கலைஞர் அவர்களைப் போலப் பேசி அசத்தினார்.  நாலடியார் கூறும் கற்றலின் தேவை என்ற தலைப்பில் முனைவர் சுகுணா உரை வழங்கினார். 


 


சிறப்புரையாற்ற வருகை புரிந்திருந்த உலக திருவள்ளுவர் பேரவை சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் வள்ளியப்பன் அவர்கள் "தமிழர் திருநாள்" என்ற தலைப்பில் திருக்குறள் கூறும் உழவர் பற்றியப் பாடல்களை கோடிட்டுக்காட்டினார். அவர்களுக்கு நினைவுப் பரிசாக பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய "பாமரை" மற்றும் "சிங்கப்பூர் விருத்தம்" நூல்களை வழங்கி மகிழ்ந்தார். ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினை தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் குடும்பமாக வந்திருந்து நிகழ்ச்சியை களிப்புற்றதோடு தனது மகளையும் மேடையேற்றி திருவெம்பாவைப் பாடலை பாட வைத்து நிகழ்ச்சிற்கு சிறப்பு செய்திருந்தனர். திடீர் வரவாக வந்திருந்த TamilCube.com குழுமத்தின் இயக்குனர் திரு.அழகுப்பிள்ளை அவர்கள் நிகழ்ச்சியின் அங்கங்களை பார்வையுற்று மகிழ்ந்தார், அடுத்துவரும் நிகழ்ச்சிகளில் தமது பங்களிப்பையும் தருவதாகக் கூறி உறுதியளித்தார்.


 


சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் கவிஞர் சாவித்ரி செல்வராஜ்


அனுராதா சுரேஷ்பாபு நன்றியுரை வழங்க, பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை ஒளிபரப்ப, சுசித்ரா அவர்களின் எட்டாவது பிறந்தநாள் வாழ்த்துகளோடு, தமிழில் பாடலைப் பாடி தமிழ்க் குடும்பங்கங்கள் கலகலப்பான நிகழ்ச்சியை நிறைவு செய்து இரவு சிற்றுண்டியுடன் நிறைவேறியது.


 


நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி மற்றும் விரிவுரையாளர் தேன்மொழியாள் அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.


 


வாழ்வியல் இலக்கியப் பொழில் – 3 ஆவது சந்திப்பு படங்களை  Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன் 


புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:




 


You tube link:


காணொளிகளுக்கானணைப்பு கீழே:


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  3 ஆவது சந்திப்பு 20-01-2018 (பாகம் 1/3)






 


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  3 ஆவது சந்திப்பு 20-01-2018 (பாகம் 3/3)




 


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.




First name: Vazhviyal Ilakkiya


Last name: Pozhil


 





 


நன்றி !


 


மரபுடன்,


எல்ல.கிருஷ்ணமூர்த்தி


வாழ்வியல் இலக்கியப் பொழில்


சிங்கப்பூர்