"வாழ்வியல் இலக்கியப் பொழில்"13-02-2018-ல் மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி
2018.
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் முதல் கலை நிகழ்ச்சி (13-02-2018 அன்று மஹா
சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018)
இலக்கியஉறவுகளுக்குஇனிய வணக்கம்,
சிராங்கூன் நார்த் அவின்யூ 1-ல் இருக்கும் தரும முனீஸ்வரன் ஆலயத்தில்13-02-2018 இரவு9.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மஹாசிவராத்திரி
கலைநிகழ்ச்சி2018 தொடங்கியது. "லிங்கோஷ்டகம்"பாடினார் ரக்ஷிகா. தொடர்ந்து
வந்த நந்திதா "ஊருகாமல் இருக்காதய்யா...." எனும் அழகியதோர் சங்கீதப் பாடலை பாடினார். தேவாரக் குழுவினர் தேவார பாடல்கள் பாடினர்.
சிறுவர்கள் பங்கேற்ற அங்கத்தில்
முதலாவதாக வந்த சுசித்திரா,
சிவராத்திரி பற்றியக் கதை ஒன்றை கூறினார். தொடர்ந்த சர்வினி
தனது சிற்றுரையில் தனக்கு தெரிந்த திருமூலர் இயற்றியத் திருமந்திர பாடலான "சிவசிவ என்கிலர்...." பாடி பொருளும் கூறினார். சிவராத்திரி என்றால் என்ன ? என்ற ஒரே தலைப்பில் பல
சிற்றுரைகளை ஆற்றிய மாணவர்கள் தன்யா, ரிஷிகணேஷ், தேசிகராஜன் மற்றும் கிஷோர் பல பயனுள்ள அரியத் தகவல்களை சுவைபட வழங்கினர்.
பெரியவர்கள் வழங்கிய
உரையில் திருமதி பவித்ரா கண்ணன் "முக்தி தரும் சிவராத்திரி" என்ற தலைப்பில்
உரையாற்றினார். இறுதியாக வந்த வாழ்வியல் இலக்கியப் பொழில்
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு எல்ல.கிருஷ்ணமூர்த்தி மஹா சிவராத்திரி
நன்னாளில் ஓத வேண்டியச் சில பதிகங்களைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்துவைத்தார்.
ஆலய மேலாண்மைகுழுவினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும்
அன்பளிப்பு அளிக்க கலைநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வாழ்வியல் இலக்கியப் பொழில் -மஹா சிவராத்திரி கலைநிகழ்ச்சி 2018
"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 10-02-2018-ல் 4ஆவது நிகழ்ச்சி "வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (10-02-2018 அன்று 4ஆவது நிகழ்ச்சி)
இலக்கியஉறவுகளுக்குஇனிய வணக்கம்,
சிராங்கூன் சமூக மன்றத்தில் 10-02-2018 மாலை 6.00 மணிக்கு
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி (4ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "சாரச நேத்ர பாரகுநா..."என்னும் அழகியதோர் சங்கீதப் பாடலை பாடினார் சுசித்திரா. "ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா..." என்னும் அழகியதோர்பக்திப் பாடலை பாடினார் காருண்யா.
திருமதி அன்னபூரணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு
விருந்தினர் மற்றும் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.
வழக்கம்போல ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக "குற்றாலக் குறவஞ்சி" பாடல் வரிகளை பாடினார் காணொளி வழியாக. தொடர்ந்து வந்த நிகிதா
மழலைப் பாடலை அழகாகப் பாடினார். சர்வினி புத்தியில்லாதவரிடம் பொறுப்புகளைக் கொடுக்க கூடாது என்பதை
விளக்கும் நல்லதொரு கதையை "தோட்டக்காரனும்
குரங்குகளும்" என்ற தலைப்பில் வழங்கினார்.
ஆசாரக்கோவை என்ற நூலில்
இருந்து வாழ்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தொகுத்து வழங்கினார் அன்யா
கண்ணன். மூதுரை நூலில் வந்த கடவுள்
வாழ்த்து மற்றும் செய்நன்றி பற்றிய ஔவையார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும்
உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. தமிழ் இலக்கனம் என்ற
தலைப்பில் தமிழில் நாம் அறிந்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய பலவற்றை நினைவு
படுத்திச் சென்றார் சமிக்ஷா. ஔவையாரின் வாழ்க்கை
வரலாற்றை ஔவையார் வேடமிட்டே வந்து அசத்தினார் தன்யா. அடுத்து வந்த பிரமோத்வர்ஷன் பல்வேறு
அதிகாரங்களில் இருந்து திருக்குறள் பலவற்றைக் கூறிச் சென்றார். ஏமாற்றிப் பொருள் சேர்த்தால் அது எவ்வகையில் விரையம் ஆகும் என்பதை அழகிய
திருக்குறள் கதை மூலம் விளக்கினார் சம்ரிதா.
நிதிஷ்ராஜ், வாழ்க்கை என்றால் என்ன என்பதை ஒரு அழகியக்
குட்டிக்கதை மூலம் சுவைபடக் கூறினார். "யாரையும்
நம்பாதே" என்ற தலைப்பில் அழகிய கதையை கூறினார் தேசிகராஜன்.
மேடையில் தம் வயது நண்பர்கள் படைக்கும் உரைகளைப் பார்த்து
உற்சாகமாகி, தானும் சிற்றுரை நிகழ்த்த, கரும்பாக மாறி இனிப்பாக பேசினார் நந்திதா.
சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையாக, சங்க கால நூல்கள்
வெளிவந்த நூல்களின் நூற்றாண்டு வாரியாக, எவ்வாறு
பிரிக்கப் பட்டுள்ளன என்பதை சுருக்கமாக கூறினார். அவற்றுள் அக்கால இலக்கியமாக சங்க இலக்கியம்
மற்றும் நீதி இலக்கியம், இடைக்கால இலக்கியமாக பக்தி
இலக்கியம், தல வரலாறு, பிற மத
இலக்கியம், அதனைத் தொடர்ந்து இக்கால இலக்கியமாக உரைநூல்கள்,
கதை, கட்டுரை, ஆய்வுநூல்கள்
என விரிவடைந்து இன்றைய நாளில் அறிவியல் தமிழ் மற்றும் கணிணி தமிழ் என இலக்கிய
வளர்ச்சி குறிப்பிடத்தக்கவை ஆகும்.
சிறு இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், ஓவியம் வரையும் ஆற்றலை வளர்க்கும் அங்கமான சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவரின் ஓவியங்கள் திரையிடப்பட்டன. மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய
விளக்கமும் கூறினர்.
திருவள்ளுவர் படத்தை சர்வினியும், கவிச் சக்கரவர்த்தி கம்பர் பட்த்தை ஜீவஜோதிகாவும், ஔவையார் படத்தை டாண்யாவும், வரைந்திருந்தனர். அனைத்து படங்களும் மிகவும் நேர்த்தியாகவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர
வாய்ப்பாகவும் இருந்தது என்றால் அது மிகையல்ல.
சங்க இலக்கிய உரையில், பட்டினப்பாலை
கூறும் காவிரிப்பூம் பட்டின இரவு
நேர நிகழ்வுகள் காட்சியை தொகுத்து வழங்கினார் கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அடுத்ததாக,ஏலாதி என்ற நூலில் இருந்து ஐந்து பாடல்கள் மூலம் நல்ல பல தகவல்களை
வழங்கினார் திருமதி பவித்ரா கண்ணன். தொடர்ந்து
வந்த திருமதி துளசிமணி, "சங்க இலக்கியத்தில்
விருந்தோம்பல்" என்ற தலைப்பில் அழகியதோர்
சிற்றுரையை வழங்கினார். வழக்கம் போல் பாடலுடன்
வந்த கவிஞர் மதியழகன்
அழகாகப் பாடினார்.
திடீர் இணைப்பாக பன்மொழி
வித்தகர் திரு முத்தழகு மெய்யப்பன் மேடைக்கு அழைக்கப்பட்டார், அவருடைய உரையில் பல மொழிகளை கற்க வேண்டியதின் அவசியத்தையும், அதற்காக சிங்கப்பூரில் இருக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ளவும், அதிக செலவில்லாமல், எவ்வகையில்
இணையம் மூலம் பல மொழிகளை கற்க முடியும் என்பதையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வந்த கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள், தமது
குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர்களை வைக்க அன்போடு வேண்டுகோள் வைத்து, நிகழ்ச்சியில் தாம் கண்டவற்றை அனுபவமாக வழங்கினார்.
சிறப்புரையாற்ற வருகை
புரிந்திருந்த திருவாரூர் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் புலவர் மு.சந்திரசேகரன் அவர்கள் "அகத்திணை" என்ற
தலைப்பில் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். வரும் நிகழ்ச்சிகளில் சங்க இலக்கியக் காட்சிகளை மாணவர்கள் நடித்துக்
காட்டுவதன் மூலம் வாழ்வியல் இலக்கியப் பொழில் எளிதில் தமது இலக்கிகை அடையமுடியும் என ஆரோக்கியமான நல்ல யோசனைகளையும்
வழங்கினார்.
ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினையும், தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் நிகழ்ச்சியில் வந்த பல
அங்கங்களையும் கண்டு களிப்புற்றார்.
தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இரவு சிற்றுண்டியுடன் இனிதே நிறைவுற்றது. நன்றியுரை வழங்கிய கவிஞர் மு.இராஜசேகரன் மறவாமல் அனைவரையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சி நெறியாளர்களாக
திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி
மற்றும் விரிவுரையாளர் தேன்மொழியாள் அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.
வாழ்வியல் இலக்கியப்
பொழில் – 4 ஆவதுசந்திப்புபடங்களை மின்னஞ்சல் வழி அனுப்புவதில் சிரமம் (1 படம் 8MB SIZE) இருப்பதால் Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களுக்கு தேவையான
படங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருகைப்பதிவேட்டில்தங்களுடையமின்னஞ்சல்விவரங்களைக்கொடுத்திருப்போருக்குமின்னஞ்சல்வந்திருக்கும், அப்படிமின்னஞ்சல்கிடைகாதவர்கள் ekrishnamurthy@yahoo.com மற்றும் ilakkiyapozhil@gmail.com ஆகியமின்னஞ்சல்வழிதொடர்புகொள்ளலாம்.
வாழ்வியல் இலக்கியப் பொழில் -4 ஆவது
சந்திப்பு 10-02-2018 நிகழ்ச்சியின்....