Tuesday 30 January 2018


வாழ்வியல் இலக்கியப் பொழில் 28-01-2018 முதல் பொங்கல் நிகழ்ச்சி

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் அங்கத்தினர் பங்கேற்ற கொண்ட முதல் பொங்கல் நிகழ்ச்சி (28-01-2018 அன்று சிராங்கூன் சமூக மன்றத்தில்....
இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,
சிரங்கூன் சமூக மன்ற பொங்கல் நிகழ்ச்சியில் வாழ்வியல் இலக்கியப் பொழில் பங்கேற்றது நமக்கு அடுத்த மைல்கல் எனலாம். கிடைத்த வாய்ப்பினை அனைவரும்
சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.
சிராங்கூன் சமூக மன்றம் நடத்திவந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமான நமது அங்கத்தில்,
அச்சுதம் கேசவம்என்ற அழகியப் பாடலுக்கு நடனம் ஆடி தொடங்கி வைத்தனர் ஜீவஜோதிகா மற்றும் அன்யா. சக்தி சகித கணபதிம்என்ற சங்கீதப்பாடலை சிறப்பாக பாடினார் சுசித்ரா.
தொடர்ந்து வந்த சர்வினி காக்கைச் சிறகினிலேஎன்ற பாரதியார் பாடலை அழகுறப் பாடினார். பாரதிதாசன் கவிதைகளைப் பாடினார் கிஷோர். பரமார்த்த குரு கதைகளில் ஒன்றான சுத்தமான உப்புஎன்ற தலைப்பில் கதையைக்கூறினார் முரளிதரன்.
சிறார்களைத் தொடர்ந்து கவிஞர் மதியழகன் பொங்கல் கவிதை ஒன்றை எழுதிப் பாடி மகிழ்ந்தார். இறுதியாக வந்த வாழ்வியல் இலக்கியப் பொழில்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி மரபுக்கவிதை ஒன்றை பச்சரிசி பொங்கல்தலைப்பில் எழுதி
வந்து பாடினார். இந்த இரண்டு கவிதைகளும் சமீபத்தில் சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8ல் ஒலிபரப்பு ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் நிகழ்ச்சியின் நெறியாளர்கள் வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் நிகழ்ச்சியின் இடையிடையே வழங்கியதோடு புதிதாக உறுப்பினராக சேர விழைவோர்க்கு தேவையான விளக்கங்களோடு அனைவருக்குமான சான்றிதழ்கள் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களை மேடையில் வழங்கினார்கள்.
குடும்பமாக வந்திருந்த பல வாழ்வியல் இலக்கியப் பொழில் இலக்கியக் குடும்பத்தினர் பொங்கல் விருந்தோடு இலக்கிய விருந்தையும் பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள் என்றார் மிகையாகாது.
சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கும் புகைப்படத்தோடும் குழு புகைப்படத்தோடும் செல்ல சந்திப்பு அழகுற நடைபெற்றது.
வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சியின் டங்களை Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன்.
சில புகைப்படங்களை கீழ்கண்ட பதிவேற்றம் செய்துள்ளோம்.
புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:
YouTube link:
காணொளிகளுக்கானணைப்பு கீழே:

 
வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சியின் தொகுப்புகளை கீழ்கண்ட Blog மூலம் காணலாம்.
https://vazhviyalilakkiyapozhil.blogspot.com
முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
First name: Vazhviyal Ilakkiya
Last name: Pozhil

நன்றி !
மரபுடன்,
எல்ல.கிருஷ்ணமூர்த்தி
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்
வாழ்வியல் இலக்கியப் பொழில் 20-01-2018-ல் 3ஆவது சந்திப்பு


"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (20-01-2018 அன்று 3 ஆவது நிகழ்ச்சி)


 


இலக்கிய உறவுகளுக்கு இனிய வணக்கம்,


 


சிராங்கூன் சமூக மன்றத்தில் 20-01-2017 மாலை 6.00 மணிக்கு வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (3ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. "அச்சுதம் கேசவம்" என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர் ஜீவஜோதிகா மற்றும் அன்யா கண்ணன்.  "சக்தி சகித..." என்னும் அழகியதோர் சங்கீதப் பாடலை மனமுருகிப் பாடினார் சுசித்ரா. திருமதி புவனா இராஜரெத்தினம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிராங்கூன் சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழுவின் தலைவர் தலைவர் திரு.காளிமுத்து மற்றும் செயலவை உறுப்பினரும் கலந்துகொண்டு அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.


 


வழக்கம்போல ஶ்ரீயா ஶ்ரீராகவ் முதல் படைப்பாக திருக்குறள்களைப் பாடினார், காணொளி வழியாக. கம்பராமாயணத்தில் இருந்து ஒரு கதையை கொண்டு வந்தார் உல.பிரஜித். அழகியப் பொங்கல் பாடலோடு வந்தார் பத்மநாபன். பாரதியார் பாடலை அழகாகப் பாடினார் சர்வினி.


நல்வழி நூலில் வந்த கடவுள் வாழ்த்து மற்றும் ஈகைப் பற்றியச் சாதிகள் தவிர வேறில்லை என்று ஔவயார் பாடல்களைப் பாடியும் பொருள் கூறியும் உரை நிகழ்த்தினார் ஜீவஜோதிகா. சுத்தமான உப்பு என்றத் தலைப்பில் ஒரு பரமார்த்த குரு கதையை கூறினார் முரளிதரன்.


ஔவையார் பாடிய ஆத்திச்சூடி 109 வரிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார் அனிஷ்.


மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலுன் வந்தார் சம்ரிதா. அவரைத் தொடர்ந்து மழலை பாடல்களுடன் வந்தார் நிகிதா. சமிக்ஷா திருக்குறளைப் பாடி மகிழ்ந்தார். திருவெம்பாவைப் பாடலை மிகவும் அழகாகப் பாடினார் காவியா சரவணன். அழகிய இரு கதைகளுடன் வந்தார் தான்யா. ருவர் ரக்ஷிகா மற்றும் தர்ஷிகா இணைந்து  பாரதியார் பாடல்களை வழங்கினர். அடுத்து வந்த இருவர் ரிஷிகணேஷ் மற்றும் தேசிகராஜன் ஆத்திச்சூடி கதைகளை வழங்கினர். அளித்தனர். 


 


இன்றைய நிகச்சியில் சிறப்பு அம்சமாக "இன்றைய மாணவர்களுக்கு பண்டைய கலாச்சாரம் தேவையே ! தேவையில்லை ! " என்றத் தலைப்பில் சிறுவர் பட்டிமன்றம் முதல் முயற்சியாக நடைபெற்ரது. நடுவராக கவிஞர் மு.இராஜசேகரன் இருந்து சிறப்புற வழி நடத்தினார்.


1. ரிஷிகணேஷ்  (தேவையே)


2. கிஷோர் (தேவையில்லலை)


3. கிருஷ்ண தேவா (தேவை)


4. இரா.ஹமுதேஷ் (தேவையில்லை)


 


நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை மிகவும் யதார்த்தமாக தமது கருத்துகளாக வைத்து வாதிட்டனர். நடுவர் அவர்களின் தீர்ப்பும் யாவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தது போற்றத்தக்கது.


 


சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையை மிகவும் சுருக்கமாக கூறி மற்ற நிகழ்ச்சிகளுக்கு வழிவிட்டார்.


 


இன்று இடைவேளையின்றித் தொடர்ந்த நிகழ்ச்சியில், சென்ற மாதம் இணைத்த புதிய அங்கமான சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற மூவர் மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர்.


தெனாலிராமன் காட்சியை சர்வினியும், ஔவையார் - முருகர் காட்சியை ஜீவஜோதிகாவும், கண்ணகி - பாண்டிய மன்னர் சபைக் காட்சியை காருண்யாவும் வரைந்திருந்த படங்கள் மிகவும் நேர்த்தியாக அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.


 


சங்க இலக்கிய உரையில், பட்டினப்பாலை கூறும் காவிரிப்பூம் பட்டின நகரின் காட்சியை அடுத்து அங்குள்ள மக்கள் பகள் வேளையில் மாலைப்பொழுதில் விளையாடும் விளையாட்டுகளைக் கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். தொடர்ந்த ஆசாரக்கோவை ஓர் அலசல் என்ற தலைப்பில் திருமதி பவித்ரா கண்ணன் வழங்கினார், பொங்கல் கவிதையுடன் வந்த கவிஞர் மதியழகன் அழகாகப் பாடினார். மேலும் கூடுதல் சிறப்பாக கலைஞர் அவர்களைப் போலப் பேசி அசத்தினார்.  நாலடியார் கூறும் கற்றலின் தேவை என்ற தலைப்பில் முனைவர் சுகுணா உரை வழங்கினார். 


 


சிறப்புரையாற்ற வருகை புரிந்திருந்த உலக திருவள்ளுவர் பேரவை சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் வள்ளியப்பன் அவர்கள் "தமிழர் திருநாள்" என்ற தலைப்பில் திருக்குறள் கூறும் உழவர் பற்றியப் பாடல்களை கோடிட்டுக்காட்டினார். அவர்களுக்கு நினைவுப் பரிசாக பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய "பாமரை" மற்றும் "சிங்கப்பூர் விருத்தம்" நூல்களை வழங்கி மகிழ்ந்தார். ஊடகவியலாளரான திரு மணிமாறன் அவர்களின் குழுவினர் இன்றைய நிகழ்ச்சியினை தொடக்கம் முதலே பதிவு செய்து வந்தனர். அவர்களின் சகோதரர் சரவணன் குடும்பமாக வந்திருந்து நிகழ்ச்சியை களிப்புற்றதோடு தனது மகளையும் மேடையேற்றி திருவெம்பாவைப் பாடலை பாட வைத்து நிகழ்ச்சிற்கு சிறப்பு செய்திருந்தனர். திடீர் வரவாக வந்திருந்த TamilCube.com குழுமத்தின் இயக்குனர் திரு.அழகுப்பிள்ளை அவர்கள் நிகழ்ச்சியின் அங்கங்களை பார்வையுற்று மகிழ்ந்தார், அடுத்துவரும் நிகழ்ச்சிகளில் தமது பங்களிப்பையும் தருவதாகக் கூறி உறுதியளித்தார்.


 


சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் கவிஞர் சாவித்ரி செல்வராஜ்


அனுராதா சுரேஷ்பாபு நன்றியுரை வழங்க, பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை ஒளிபரப்ப, சுசித்ரா அவர்களின் எட்டாவது பிறந்தநாள் வாழ்த்துகளோடு, தமிழில் பாடலைப் பாடி தமிழ்க் குடும்பங்கங்கள் கலகலப்பான நிகழ்ச்சியை நிறைவு செய்து இரவு சிற்றுண்டியுடன் நிறைவேறியது.


 


நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி மற்றும் விரிவுரையாளர் தேன்மொழியாள் அவர்களும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.


 


வாழ்வியல் இலக்கியப் பொழில் – 3 ஆவது சந்திப்பு படங்களை  Google+ மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன் 


புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:




 


You tube link:


காணொளிகளுக்கானணைப்பு கீழே:


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  3 ஆவது சந்திப்பு 20-01-2018 (பாகம் 1/3)






 


வாழ்வியல் இலக்கியப் பொழில் -  3 ஆவது சந்திப்பு 20-01-2018 (பாகம் 3/3)




 


முகநூல் பயன்படுத்துவோர் கீழ்கண்ட இணைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.




First name: Vazhviyal Ilakkiya


Last name: Pozhil


 





 


நன்றி !


 


மரபுடன்,


எல்ல.கிருஷ்ணமூர்த்தி


வாழ்வியல் இலக்கியப் பொழில்


சிங்கப்பூர்


 

Thursday 25 January 2018





வாழ்வியல் இலக்கியப் பொழில் 01-01-2018 இலக்கியக் கலந்துரையாடல்
 

இயற்கை மழையும் இணைந்துகொண்ட இலக்கியக் கலந்துரையாடல்: 01-01-2018

 

யாவருக்கும் நன்னாளாம் ஆங்கிலப் புத்தாண்டில் 01-01-2018 பகல் 2 மணியளவில் வாழ்வியல் இலக்கியப் பொழில் விடுத்த அழைப்பினை ஏற்று, புதுவை முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் கவிஞர் சீர்காழி உ.செல்வராஜூ தொடக்கவுரையாக முனைவர் அவர்களின் தமிழ்ப்பணி அளப்பரியது என்றும் முந்தைய ஆவணப்படத்தின் முக்கியத்துவம், முனைவர் அவர்களுக்கு நாட்டுப்புற பாடல்களின் ஆர்வம் மற்றும் அதற்காக ஆற்றிவரும் அரியப்பணிகள் மற்றும் 31-12-2017 மாலை 5 மணியளவில் சையது அலி சாலையில் அமைந்துள்ள ஆனந்தபவன் உணவகத்தின் இரண்டாவது தளத்தில் நடைபெற்ற இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் அவர்களின் ஆவணப்பட வெளியீடு பற்றியும் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

 

தொடர்ந்து உரையாற்றிய கவிஞர் மதியழகன் அவர்கள் முதன்முறையாக 31-12-2017 அன்றைய ஆவணப்பட வெளியீட்டில் முனைவர் அவர்களின் அரியத் தமிழ்பணியை அறிந்ததில் பேருவகை கொண்டார். இனிவரும் படைப்புகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளையும் தவறாமல் தருவதாக உறுதியளித்தார்.

 

அனைவருக்கும் புதியவர் தொழில்நுட்ப பொறியாளர் கி.இரவீந்திரன் தமது குடும்பத்தினருடன் வந்திருந்து சிறப்பித்தார். தமிழ் மீது அளவிலா ஆர்வம் கொண்ட அவர் வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்விற்கு தம்மால் இயன்ற வகையில் உதவிடவும் முனைவர் அவர்களின் தமிழ்த்தொண்டில் தம்மை இணைத்துக்கொள்வதாகவும் கூறியது வரவேற்கத்தக்கது.

 

கவிஞர் சாவித்ரி செல்வராஜ் அவர்கள், முனைவர் அவர்களின் அரியப் பணிகளை பாராட்டியும் அதேசமயம் தொடர்பணிகளுக்கு இடையே ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தையும் சரிவர கவனித்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார்.

 

கலந்துரையாடலில் தமது தமிழ்ப்பணியின் அனுபவங்களை கோர்வையாக அளித்த முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் தமிழ்ச்சுவை பொருந்திய உரை மிகவும் எளிமையானது. இதுவரை தமிழ்ப்பணியாற்றியவர்களில் உலகிற்கு அதிக அளவில் அறியப்படாதவர்களை இனம்கண்டு இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியவர்களின் நீண்ட பட்டியலையும் நம்மிடையே வைத்து மகிழ்ந்தார். இருபது நூல்களை இயற்றியவர் என்பதையும் உரையின் இறுதியில் மிகவும் எளிமையாக வைத்தார்.

 

நினைவுப்பரிசாக படைப்புகளை பரிமாற்றம் செய்துகொண்டும் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் முந்தைய நிகழ்வுகளை காணொளி வழியாக கண்ணுற்றும் சுவைபட கலந்துரையாடல் நிறைவுற்றது.

 

முனைவர் அவர்களின் மலேசிய, சிங்கப்பூர் பயணத்தில் அமைந்த இந்த சந்திப்பு பல்வேறு ஆக்கப்பணிகளுக்கு அச்சாரமாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

 

சில புகைப்படங்களை கீழ்கண்ட பதிவேற்றம் செய்துள்ளோம்.

 

புகைப்படங்களுக்கானணைப்பு கீழே:


நன்றி !

 

மரபுடன்,

பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

வாழ்வியல் இலக்கியப் பொழில்

சிங்கப்பூர்

 



"வாழ்வியல் இலக்கியப் பொழில்" 09-12-2017-ல் 2ஆவது சந்திப்பு



"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (09-12-2017 அன்று 2 ஆவது


நிகழ்ச்சி


தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

 

சிராங்கூன் சமூக மன்றத்தில் 09-12-2017 மாலை 5.30 மணிக்கு வாழ்வியல். இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சி (2ஆவது நிகழ்ச்சி) தமிழ்வணக்கப் பாடலுடன் தொடங்கியது. ஆனத்த நடனம் என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினர் அன்யா கண்ணன்.  உருகாமல் இருக்காதய்யா என்ற சங்கீதப் பாடலைப் மனமுருகிப் பாடினார் ஜீவஜோதிகா.

திருமதி துளசிமணி சத்தியமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்க, ஶ்ரீயா ஶ்ரீராகவ் படைத்த பாரதியார் பாடல் மற்றும் கொன்றை வேந்தன் பாடல்கள் காணொளியாக திரையில் காண்பிக்கப்பட்டது.

உலகப் பொதுமறையாம் திருக்குறளுடன் வந்தார் உல.பிரஜித். தங்க முட்டை என்ற தலைப்பில் கதைக் கூறினார் சர்வினி. அச்சமில்லை என்ற பாரதியார் பாடலை அழகாகப் பாடினார் ஜீவஶ்ரீ. சேர் இடம் அறிந்து சேர் என்ற ஆத்திச்சூடி கதையைக் கூறினார் ஜீவஜோதிகா. தூங்கிய ஆறு என்றப் பரமார்த்த குரு கதையை கூறினார் முரளிதரன். ஒரு நகைச்சுவை கதையுடன் வந்தார் ஹமுதேஷ். இளமையில் கல் என்ற ஆத்திச்சூடி கதையையும் திருப்புகலூர் பற்றிய பக்தி இலக்கியச் செய்தியையும் கொண்டுவந்தார் கிஷோர். திருக்குறளும் விளக்கமும் வழங்கினார் கிருஷ்ண தேவா. இரட்டையர்கள் விஜய் சுந்தர் மற்றும் விஜய் கிருஷ்ணா பழமொழிகளைக்கூறி விளக்கங்களும் அளித்தனர்.  சிறார்கள் பங்கேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் அறிமுக உரையில் தமிழ்ச்சங்கம் பற்றியச் செய்திகளான தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இவற்றின் அமைந்த காலம், அமைந்த இடம், இயற்றியப் புலவர்கள், பாடியப் புலவர்கள், இயற்றிய நூல்கள், அந்தந்த கால இலக்கண நூல்கள் பற்றித் தெளிவாக தமது உரையில் குறிப்பிட்டார். தமிழ் இலக்கிய சங்க கால நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு மற்றும் பதினெண்மேல்கணக்கு நூல்களின் பட்டியிலிட்டும் அவை கூறும் செய்திகளையும் தமது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து, ஔவையார் காட்டும் வாழ்வியல் நெறிகள் என்றத் தலைப்பில் உரையாற்றினார் சந்தோஷ்.

இந்த மாத புதிய அங்கமாக, குறுக்கெழுத்துப் போட்டியில் பலர் ஆர்வமாக தங்களது விடைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

 

 

சிறிய இடைவேளையிக்குப் பின் தொடங்கிய நிகழ்ச்சியில், இந்த மாதம் மேலும் ஒரு புதிய அங்கமான சங்க கால காட்சிகள் ஓவியம் வரைதல் அங்கத்தில் பங்கேற்ற நால்வர் மிகவும் சிறப்பாக வண்ணம் நீட்டி இருந்ததை திரையில் இட, அதைப்பற்றிய விளக்கமும் கூறினர்.

மனுநீதி சோழன் காட்சியை சர்வினியும், சோழ மன்னர்கள் பற்றி ஜீவஜோதிகாவும், தூங்கிய ஆறு காட்சியை முரளிதரனும் பாரதியார் படத்தை கிஷோரும் வரைந்த நேர்த்தியான திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.

 

சங்க இலக்கிய வரலாறு என்ற தலைப்பில் கவிஞர் இராஜசேகரன், சிந்திக்க சிரிக்க சிலேடைகள் என பேச்சாளர் பிரம்மகுமார், பட்டினப்பாலை கூறும் காவிரிப்பூம் பட்டின நகரின் காட்சியை கவிஞர் உஷா கிருஷ்ணமூர்த்தி, ஆசாரக்கோவை ஓர் அலசல் என்ற தலைப்பில் திருமதி பவித்ரா கண்ணன், பாட்டு இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் மதியழகன், நீதி நூல் பயில் என்ற தலைப்பில் புலவர் விஜயசுதா ஆகியோர் உரைகள் வழங்க, இலக்கிய நூலிற்கு இலக்கணம் தொல்காப்பியம் தேவைப்படுவது போல் தனிமனித ஒழுக்கத்திற்கு நெறிமுறைகள் தேவையென தமது சிறப்புரையில் வழங்கினார் நார்வேயில் இருந்து வருகை புரிந்து கலந்து கொண்ட பொறியாளர் கி.அறவாழி, அவருடைய நண்பரும் ஊடகவியலாளருமான திரு மணிமாறன் அவர்களும் இனிவரும் நிகழ்ச்சியில் எவ்வாறு தமிழ்மொழியை பயன்படுத்த திட்டங்கள் உளன என்பது பற்றி அடுத்தடுத்த நிகழ்வுகளில் பகிர்ந்துகொள்வதாக உறுதியளித்தார். இறுதியாக குழந்தை பத்மநாபன் தோசையம்மா தோசை என்றப் பாடலை பாடினார்.

 

சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார் கவிஞர் சாவித்ரி செல்வராஜ். திடீர் வரவாக தமிழகத்தின் பண்ருட்டியிலிருந்து வந்திருந்த  ஓய்வுபெற்ற  தலைமையாசிரியர் திரு பாண்டு அவர்கள் 100 மலர்களின் பெயர்களை இடைவிடாது தமிழில் மாலையாகவும் 198 நாடுகளின் பெயரையும் மிகவும் சரளமாக கூறியும், இடையிடையே பாடல்கள் மற்றும் நாடகபாணியில் திரைப்பட வசனங்களைக் கூறி நிகழ்ச்சியை மெருகூட்டினார்.

 

சுரேஷ்பாபு நன்றியுரை வழங்க, பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பிரிதி எடுத்துக்கொடுத்து, ஜீவஜோதிகா அவர்களின் ஏழாவது பிறந்தநாள் கேக் வெட்ட, தமிழில் பாடலைப் பாடி தமிழ்க் குடும்பங்கங்கள் கலகலப்பான நிகழ்ச்சியை நிறைவு செய்து இரவு சிற்றுண்டியுடன் நிறைவேறியது.

 

நிகழ்ச்சி நெறியாளர்களாக திருமதி அனுராதாவும் திருமதி பவித்ராவும் அழகுற நெறிப்படுத்தினார்கள்.

 

 

வாழ்வியல் இலக்கியப் பொழில் – 2ஆவது சந்திப்பு படங்களை பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களுக்கு தேவையான படங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணப்பு கீழே:

சிராங்கூன் சமூக மன்றத்தில் 09-12-2017 மாலை 5.30 மணிக்கு வாழ்வியல். இலக்கியப் பொழில் அமைப்பபின் மாதாந்திர நிகழ்ச்சியின் (2ஆவது நிகழ்ச்சி) காணொளியை இணையத்தில் காணலாம்.

YouTube link:
 


 
வாழ்வியல் இலக்கியப் பொழில் 26-11-2017 முதல் ஆலோசனைக் கூட்டம்


கிழக்கு கடற்கரைப் பூங்காவில் முதல் ஆலோசனைக் கூட்டம்


கிழக்கு கடற்கரைப் பூங்கா
---------------------------------------
விடுப்பு விட்டு நான்கு நாட்கள்
விருப்பத்தோடு நான்கு குடும்பம்
ஒன்றுகூட உறுதியோடு
திட்டமிட்டு வந்தார் முன்னே
விட்டுவிட்டு மழைபொழியும்
வேட்கையோடும் களிக்க ஆசை
பாசிர் ரிஸ் கடற்கரை செல்ல
பாசத்தோடு ஏற்பாடு அனைத்தும்
பசுஞ்சோலை பரந்த வெளி
பாற்கடலின் கரையோரம்
மழைவந்தால் ஒதுங்கி நிற்க
மண்டபம் ஏதுமில்லை
கடைசி நேர மாற்றம் காண
கிழக்கு கடற்கரை பூங்கா செல்ல
கணக்கிட்டு பேருந்தில்
முனைப்புடனே மூன்று குடும்பம்
மாடி பேருந்தில் மடமடவென
மாறிமாறி இருக்கை கண்டார்
ஓரிரு பயணிகள் மட்டும்
ஒவ்வாத நிலையில் முகம் சுளிப்பு
களித்து மகிழந்து, கொள்ள இன்பம்,
கண்டுகொள்ளாவில்லை மற்றோர் வெறுப்பு
கூட்டுக்குடும்ப சூழல் ஒருமணி நேரம் பயணம் !
காலார கடந்து செல்ல
அரை மைல் தூரம் இருக்கும்
குடகுமலைக் காற்ற வரவேற்க
கடற்கரை சேர்ந்த நேரம்
வாட்டவில்லை வெயில் இன்று நண்பகல் முன்பு
நட்டுவைத்த மரங்கள் தான்
கருகருத்த நிழல் நாடி
கட்டாந்தரை யில்லை இங்கு
கல், மண் இல்லா புல்வெளி
விரிப்புகள் பரப்பி அமர
விநாடிகள் செல்ல செல்ல
வாழ்க்கையினை இரசித்த படி !
மிரட்ட வில்லை வானம்
இருண்டு இருந்தும்
இடி மின்னல் இல்லை எனினும்
இடமாற்றிக் கொள்ள ஆசை
மழைக்கு ஒதுங்கும் இடம் நாடி
முன்பதிவு இல்லாத போதும்
முன்னேற்பாடாய் ஒரு சிறு மண்டபத்தில்
விருப்பத்தோடு விரிப்பு விரித்து
விறுவிறுப்பாய் நிகழ்ச்சி தொடக்கம் !
கிஷோர் சஹா அவதரித்த நாளை
கிழக்கு கடற்கரையில் கேக் ஓளிர
மண்ணில் நல்ல வண்ணம் தேவாரம்
மணக்கும் தமிழில் தேனாய்ப் பாய !
சிற்பி இயற்றிய பாடல் வரிகள்
தமிழில் பிறந்தநாள் பாடல் ஒலிக்க...
பற்றவைத்த ஒற்றை மெழுகுவர்த்தி
பத்து வயதை விளக்கிச் சொல்ல
மெழுகுவர்த்தி ஒளியால்
தமிழ்பாடல் முடிந்த பின்னே
தாம் கற்ற உலகறிந்த பாடல் ஒன்று
ஆங்கிலம் வழி
அதனைத்தொடர்ந்து சிறார்களுடன் பெரியவர்கள் பாடிய வாழ்த்து !
குடும்பம் ! குதூகலம் !! கொண்டாட்டம் !!!
கடல்நீர் கால் நனைக்க
காத்திருந்த செல்வங்கள்
காலார நடந்து குளித்து
குதித்து ஆடியபடி...
வந்த வேளையின் ஒரு பகுதியாக
வாழ்வியல் இலக்கியப் பொழில்
ஆலோசனைக் கூட்டமும் தான் !
விளக்கம் வேண்டி வந்த சிலர்
விழைந்து வந்து சேர்ந்து கொள்ள
வினாக்களும் விடைகளும்
விருப்பத்தோடும் விவாதத்தோடும் !
இடைவேளையாக இடையில் உணவு
ஆஹா ஐந்து குடும்பம் சமைத்த
அறுசுவை உணவுகள்
வகைகள்
புளியோதரையின் சுவையான கலவை
கருவேப்பிலை எலுமிச்சை தயிர்சாதம்
வெஜ் பிரியாணி தேங்காய் சாதம்
கருணைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு பொரியல் அவியல்
ஒதுங்கி நின்ற ஊறுகாய்
MTR பூண்டின் சுவைக்காக கூடுதல் பிடியாக
நிறைவான உணவு
சிறுவயது கூட்டாஞ்சோறா ? இல்லை
கூட்டுக்குடும்ப சாயல் தானா ?
குறைவின்றி உண்டு மகிழ
குடும்ப வேவிகள் அறுபட்டன.
குளித்து மகிழ ஒரு சாரர்
குடும்ப கதை ஒரு சாரர்
இரண்டிற்கும் இடையே
களிப்பில் ஆழ்ந்து கண்ணயர்ந்த ஒரு சாரர் !
யாவரும் ஒன்று சேர மீண்டும் கொண்டாட்டம்
சிறிய சவுண்டு சிஸ்டம்
பாட்டுடன் பரதநாட்டியம்
பாடகர் நாட்டிய மேதைகளின் அரங்கேற்றம்
அத்தனையும் அருமை விறுவிறுப்பாக
சின்னஞ்சிறு கலைஞர்கள் பலரால்
ஒருமணி நேரம் ஓடியது கலகலப்பாய் !
பயணமாக ஆயத்தம்
பை பை சொல்லி இரு குடும்பம் செல்ல
காலார நாடினர் காப்பி கடைத்தொகுதி !
தே, தே-சி, மைலோ பானவகையோடு
இந்திய வகை பலகாரம்
மெதுவடை, மசாலா வடை, வெங்காய போன்டா
விருப்பத்தில் சிறிய அளவில் நொறுக்கு தீனி !
கணக்காய் வந்த பேருந்தில்
கால்வைக்க சிறு தயக்கம்
அரைநாள் கழித்த போதும்
முழுநாள் களிப்பாய் உணர்வு !
தொடர்ந்த மாடிப்பேருந்து பயணத்தில்
மலரும் நினைவலைகளை சுமந்தபடி
சுகமான அனுபவம்
பிரிய மனமின்றி பிரிந்தனர் புன்முறுவலோடு
மனநிறைவாய் வீடு சேர
முகத்திலாடும் இனியதொரு
என்றும் நிற்கும் பயணம் இது !
ஆவலோடு மீண்டும் மீண்டும் அசைபோட
இந்த வரிகள் மெருகூட்டும்
ஆழ்மனதில் நிறுத்தட்டுமே !
ஆக்கம்,
உங்களில் ஒருவனாய் பயணித்த படைப்பாளி.
சில படங்கள் கீழ்வரும் இணைப்பில்:
https://photos.app.goo.gl/ZlVTbmLah4ZDABwW2
Best Regards,
E. Krishnamurthy

வாழ்வியல் இலக்கியப் பொழில் 11-11-2017 இணையத்தில் அன்றைய தொடக்கவிழா பற்றியச் செய்தி தினமலர் இணையப் பக்கம் உலக தமிழர் செய்திகள் பிரிவில் சிங்கப்பூர்